Wednesday, May 25, 2011

ஏ அனைத்துலக சமூகமே...


ஏ அனைத்துலக சமூகமே...

ஏசி சிரித்தீர்..
எக்களித்தீர்..
ஏங்கிய கைகள் ஏறி மிதித்தீர்.

அழுது வீங்கிக் கண்கள் வலித்தன...
வற்றிய முலைகள் இரத்தம் வடித்தன..
கதறிய தொண்டைகள் வறண்டுப் போயின..

அய்யகோ ! என்ன கொடுமை இது...
ஒருவேளை சோற்றுக்கும்,
ஒழுக்க வாழ்வுக்கும்..,
கையேந்தி நிற்கும் 
நரகக் கொடுமை...

நாங்கள் எல்லாம்
மனிதர்கள் அல்லரோ..!
நாயிற் கடைய 
ஈனப் பதர்களோ....!

சுதந்திரக் காற்றை 
சுவாசிக்க வேண்டி
விடுதலை கேட்டது
அத்தனை பெரிய
குற்றமா, தவறா ....!

பிஞ்சுப் பூக்களைப்
பிய்த்து எறிந்தீர்...
சுமந்த கர்பங்கள்
கலைத்து சிரித்தீர்...

வலியில் துடித்து
மரணம் வேண்ட,
இரதம் வழிய
புணர்ந்து ரசித்தீர்..!

குண்டுக்கு தப்பித்து
குழியில் ஒளிய
மண்ணை மூடி
சமாதி செய்தீர்...!

ஏதும் இல்லை
இழக்க இனியும்...
இருந்தும் பயமோ
எங்கள் மீது...

அறிக்கை வந்த
அடுத்த நொடியே
அலறி துடித்தீர்
கண்ணீர் வடித்தீர்
முதலைத் தனமாய்..

இழைத்த தவறை
அழுத்தி மறைக்க
இறுக்கிக் கட்டினீர்
நீதியின் கண்களை...

உலகம் கூடி
தடுக்கப் பார்க்க
உதவா தேசங்கள்
அழுது நடிக்க

ரசித்து சிரிக்கிறது
அரக்கக் கூட்டம்
தவறென்ன செய்தோம்
தமிழ்பேசும் சூலில்
கருவானதைத் தவிர...

ஏங்கிய எங்கள்
பிள்ளைகள் கேட்பது
அரசா...? பதவியா ...?
அநியாயக் கொடுமை செய்ய
இராணுவ பலமா...?

கேட்பது எல்லாம்
மானமும், உயிரும்
மங்காதப் புகழ் கொண்ட
தமிழ் பேசும் வாழ்க்கையே............................................






2 comments:

Anonymous said...

first remove ur word verification easy for comment .


வேண்டாம் மீண்டும் இந்த சமுகத்தை நம்பதிர்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படிக்கும் போதே மனசு வலிக்கிறது...

கண்டிப்பாக மாறும் எல்லாம்..
சிந்தும் கண்ணீர் ஒரு நாள் வசந்தத்தை கொண்டுவரும்...