Monday, May 10, 2010

கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க .............

எங்கிருந்து தான் வருவாய்ங்களோ கேள்விய மட்டும் நல்லா தெளிவா கேட்டுகிட்டு , மண்டைல இருக்கிற எல்லா முடியையும் (மசுருன்னு தமிழ்ல சொல்லக்கூடாதாம் ) பிசுக்கிடுற மாதிரி கேக்குராய்ங்க .
இந்த பயலுவளுக்கு ஒவ்வொரு எடத்துலயும் ஒவ்வொரு பேரு. பொதுவா வேல பாக்குற எடத்துல அப்புரசண்டிகளா புதுசா வருவாய்ங்க. வரும்போது நல்லா ஊரு உலகத்துல இருக்குற எல்லா சாமியையும் வேண்டிக்கிட்டு வருவாய்ங்க. மொதல்ல கேண்டீன் எங்கன்னு ஒரு கேள்வி வரும் . அப்பவே உஷராய்க்கிடனும் . இல்ல தொலஞ்சிங்க, அர்ஜுனனோட அம்பு மாதிரி சும்மா நிக்கவே நிக்காது .
இவிங்களக் கூட மன்னிச்சு விட்டுரலாம் , ஆனா பஸ்சுல போகும்போது சார் கொஞ்சம் தி நகர்  வந்தா சொல்றிங்களான்னு  சரின்னு நம்மளும் மண்டைய ஆட்டிருவோம். அதுக்கப்புறம்  நடக்கும் பாருங்க. வர்ற ஒவ்வொரு ஸ்டாப் ளையும்  இங்கியா இங்கியான்னு கேட்டு நமக்கே தி நகர் எங்கன்னு மறக்க vechchuru வாய்ங்க  .
                      இவிங்களுக்கு வாழ்க்கையே சந்தேகம் தாங்க . தூங்கும்போது கூட அடிக்கடி முழுச்சி கோமனத்தத் தொட்டு பாத்துக்குவாய்ங்க  . அவ்வளவு உஷாரு. கடையில பில்லு  குடுக்கும்போது ஒரு தடவைக்கி பத்து தடவ நோட்டுல இருக்குற மை அழியற அளவுக்கு எண்ணிப் பாக்குறது.
எங்கயாவது வெளியில போகும்போது வீட்ட பூட்டுனமா இல்லையான்னு பாத்து தடவ இழுத்து பாக்குறதுன்னு எப்பவுமே முன்னச்செரிக்கை முத்தன்னாக்களா இருப்பாங்க. இவங்களோட ஞாபகார்த்தமா எல்லா வீட்டுலயும் இவங்க படத்த மாட்டி வெச்சுருப்பாங்க.
என்ன அந்த படத்துல கண்ணு கொஞ்சம் பெருசா நாக்கு மட்டும் கீழ தொங்கிட்டிருக்கும்...

No comments: