Sunday, November 14, 2010

நீங்களே ஒரு நியாயம் சொல்லுங்க....

வணக்கமுங்க ....!
இந்த வாரம் எந்த பேப்பர எடுத்தாலும் முக்கியமான அஞ்சு  விஷயம் சுத்தி சுத்தி
இருக்குங்க..

1. அமெரிக்காவிலர்ந்து அதிபர் ஒபாமா வந்துருக்காராம் . நல்ல விஷயம் . என்னதான் அவரு வியாபார நோக்கத்துக்காகவும் ஆசிய பிராந்தியத்துல நல்ல புள்ள வேஷம் போடவும் வந்தார்னாலும்  மனுஷனோட பேச்சு பிரமாதமுங்க, அப்புடியே கட்டி போட்டுடுது. சாமி தொற என்னாம்மா இங்கிலீஷ் பேசுது... வந்ததே வந்துட்டீங்க பக்கத்துல இருக்குற இலங்கையில எங்க சாதி சனமெல்லாம் வாடுதுங்கய்யா, ஏதாச்சும் ஒரு குரலை  குடுத்துட்டுப் போங்க. என்னதான் லட்ச லட்சமா சம்பாதிச்சாலும் ஒரு நூறு ரூவா பிச்ச போடுறதில்லையா , அது மாதிரின்னு  வெச்சுக்குங்க....

2.கோயம்புத்தூர்ல ரெண்டு பச்சப் புள்ளைங்கள கடத்திக் கொன்னவுங்கள போலீஸ் என்கவுண்டர்ல சுட்டுக் கொன்னுடுச்சாம் . ஒண்ணுமே புரியலைங்க, தப்புப் பண்ணவனுக்கு குடுத்த தண்டனைன்னு நெனைச்சா , நமக்குள்ள   எப்பவுமே ஒளிஞ்சிட்டிருக்குற குரூரம் வெளிப்படுதுன்னு அர்த்தமுங்க. கண்ணைக் குத்துனா பதிலுக்கு இன்னொரு கண் தானா... காந்தி தேசமுங்க .

3.நிர்ணயிக்கப் பட்ட பள்ளிக் கட்டணத்தை  ஏத்துக்க மாட்டமுன்னு , மேல் முறையீடு பண்ணி இருக்காங்களாம். நல்லாப் பாத்துக்குங்க இவங்ககிட்டதான் உங்க புள்ளைங்கள நம்பி நாளெல்லாம் அனுப்பி வக்குறீங்க . நாளைக்கே பணம் பத்தலைன்னு சாயங்கலத்துக்குள்ள ஒரு லட்சம் கொண்டு வந்தா தான் புள்ளைய வீட்டுக்கு அனுப்புவேன்னு சொன்னாலும் சொல்வாங்க...

2. அமைச்சர் ஆ. ராசா ராஜினாமா பண்ணிட்டாராமுங்க , இதுக்கு எதிரா குரல் குடுக்கரவங்குலப் பாருங்க, சாத்தான் கண்டிப்பா வேதம்  ஓதுமுங்க...
இதுல பத்தாக் குறைக்கு சாதி பிரச்சனைய வேற கெளப்பிக்கிட்டு. ஏன்யா நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களா..உண்மையிலேயே நீங்க தான்யா சாதி பிரச்சனைய பெருசா கெளப்பிக்கிட்டு இருக்கேங்க, ஏன்னா இதுல இப்பிடி ஒரு விஷயம் இருக்குன்னு கண்டிப்பா ராசாவுக்கே தெரிஞ்சிருக்காது..
அய்யா கலைஞர் அய்யா , தயவு செஞ்சு கடிதமோ , கவிதையோ மட்டும் எழுதாதீங்க.
முடியல..... அழுதுடுவேன்....

5. உண்மையிலேயே முத்தான ஒரு செய்திங்க , 15 வருஷமா வீட்டுக் காவல்ல இருந்த ஆங் சான் சுகி விடுதலை ஆயிட்டாங்க. இது சனநாயகத்துக்கும் மனித உரிமைக்கும் கெடச்ச நியாயமான ஆனா தாமதமான  வெற்றிங்க... அவங்கள மாதிரி ஒரு தலைவி வாழ்ந்த காலத்துல நாம இருந்தோன்றதே ஒரு பெரிய சந்தோஷமுங்க....தலைவர்னு யார யாரையோ சொல்றமே அதுக்கான உண்மையான அர்த்தம் இவங்க தாங்க...

2 comments:

THOPPITHOPPI said...

பலசெய்திகளை அருமையாக தொகுத்து கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்

சுரேஷ் சே said...

நன்றி தொடர்ந்து படிங்க