அரை பீர் அடிச்சாலே அலம்பல் பண்ற டுபாக்கூருங்களுக்கு மத்தியில ஒரு புல்லுக்கும் ஓபாமாவ கலாய்க்கறவன் நீ.
ப்ளாக் எழுத ஆரம்பிச்ச அன்னைக்கே உன்னப் பத்தி எழுதனும்னு தோனுச்சு. உன்ன நான் முதல் முதலா காலேஜ்ல பாத்தத ஏன் பேரப் புள்ளைங்கள சுத்தி ஒக்கார வெச்சு கதையா சொல்லலாம். என்னமோ தெரியல பாத்தவுடனே உயிர் நண்பன்னு உன்ன மட்டும் தான் மனசு சொல்லுச்சு.
ஒருநாள் நீ பேசலைன்னாலும் என்னமோ மனசு பூரா பாரமா இருக்கும். நீ என்ன விட்டுட்டு யார் கூடயாவது பேசுனா என்னன்னவோ பண்ணும். என் நல்லத விட அதிகமா என் கஷ்டத்தைத் தான் அதிகமா உன்கிட்ட சொல்லியிருக்கேன்.
எவ்வளவு பிரச்னையோட நான் வந்தாலும் கலாய்ச்சு காலி பண்றவன் நீ.
ஒருதடவ நீயும் நானும் ஒண்ணா வேல பாத்தோம் அப்போ வேலையினால நமக்குள்ள சண்ட வந்துச்சி. அன்னைக்கி நெனச்சிருக்கேன் இந்த வேலையே போனாலும் பரவல்ல. நமக்குள்ள சண்டையே வரக் கூடாதுன்னு.....
அடிக்கடி யோசிப்பேன் எல்லா பிரச்சனைக்கும் எப்பிடி உன்கிட்ட தீர்வு இருக்குன்னு..
சரின்னு மனசுல பட்டா தயங்காம சொல்றவன் நீ
உன்ன நண்பன்னு சொல்றதா இல்ல சகோதரன்னு சொல்றதா எனக்கு புரியவே இல்ல
அதனால தான் ஆஸ்பதியிரியில இருக்கும்போது உன்கிட்ட பேசுனா நல்லாருக்கும்னு தோனுச்சு..
உன்கிட்ட பணமா பொருளா நெறைய வாங்கிருக்கேன்...
ஆனா திருப்பி குடுக்கும்போது எனக்கு கம்மியாத் தான் தோணும்...ஏன்னா உன் நட்ப விட எதெல்லாம் ரொம்ப கம்மி...
சாமிக்கிட்ட நான் வேண்டிக்கிறதெல்லாம் ஒன்னே ஒண்ணுதான் .உனக்கும் ஒரு நல்ல வாழக்க வந்து எப்பவுமே நீ எனக்கு நண்பனா இருக்கணும்னு...
கடவுள் இருக்காருன்னு பகவத் கீதைய பத்தி நாலு மணி நேரம் பேசுவ ..திடீர்னு ஒருநாள் கடவுள்ங்கற சித்தாந்தம் பஞ்சடைச்ச பொய்யுன்னு அஞ்சு மணி நேரம் ஆக்ரோசமா ஆர்கியு பண்ணுவ....
உன்னோட பார்வைல வாழ்க்கைங்கறது இமயமலைல ஏறி சாதனை பண்றது இல்ல...அங்க போய் குளிர்ல உக்காந்து சூடா ஆவி பறக்க இஞ்சி டீ குடிக்கற அனுபவம்தான்னு ..
உன்னால மட்டும் எப்புடி நல்லத மட்டுமே நெனைக்க முடியுது..
ஒருநாள் உன்னோட காதலைப் பத்தி என்கிட்டே சொன்ன, அன்னைக்கு நீ வானத்த விட ஒசரமாத் தெரிஞ்ச எனக்கு...
இன்னொரு ஜென்மம் வந்தா அதுல நீ நானாவும் நான் நீயாவும் பொறக்கணும். அப்பதான் என்னால உனக்கு நெறைய செய்ய முடியும்..
மச்சி மறுபடியும் ஒருநாள் துவாக்குடியில அந்த டீக்கடையில எல்லாத்தையும் மறந்துட்டு ரொம்ப நேரம் பேசணும் மனசுவிட்டு...
அன்புள்ள ராஜாவுக்கு
உன் நண்பன்
b
2 comments:
kalakkiputteenga innum pala padhivugal podunga indha madhiri
enna adhu jigudinga
Post a Comment