Wednesday, August 25, 2010

கதவை திறந்து வைத்துக் கொண்டு உங்களுக்கு குளிக்கப் பிடிக்குமா... உங்கள் மனைவியோடு நேற்று இரவு பேசியதெல்லாம் இன்று ரேடியோவில் கேட்கப் பிடிக்குமா..
இல்லை தானே ....
அப்புறம் ஏங்க இண்டர்நெட்ல கண்ட இடத்துல உங்க பூர்வீகம் மொத்தத்தையும் எழுதி வக்குறீங்க. நெறைய பேரு அவங்க காதலியோட பொண்டாட்டியோட இருக்கிறது எல்லாத்தையும் படம் புடிச்சி வெச்சுக்கிறாங்க.எல்லார் கையிலையும் செல் போன் இருக்கு அதுல காமெராவையும் சேத்து விக்குறாங்க .
இதனால பாக்குறது எல்லாத்தையும் படம் புடிக்கலாமா... அதப் போதாதுன்னு இண்டர்நெட்ல வேற போட்டு என்ன பெருமையோ..இப்பல்லாம் facebook, orkut மாதிரி 
எடங்கள்ள நீங்க போடுற படங்கள திருடரதுக்குன்னே ஒரு கும்பல் இருக்கு.
picasa மாதிரி ஆன் லைன்ல படங்கள் போடும்போது உங்க அனுமதி இல்லாம யாரும் பாக்க விடாதீங்க ....
அய்யா அந்தரங்கம்ன்றது அந்தரங்கமாவே இருக்கணும் ... அது அடுத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கக் கூடாது...

No comments: