தமிழகத்தின் உயர்ந்து வரும் விலைவாசி ஏற்றத்திற்காகவும் , லஞ்சம், வறுமை போன்றவற்றை ஒழிப்பதற்காகவும் முதல்வர் கலைஞர் அவர்களின் தனிப்பட்ட மேற்பார்வையின் கீழ் நடந்து வரும் அஜித்- ஜாக்குவார் தங்கம்- ரஜினியின் விவகாரத்தை எடுத்து சொல்லிக் கொண்டிருக்கும் எல்லா ஊடகங்களுக்கும் என் முதல்கண் வணக்கம் .
என்ன நடக்கிறது..
ஒரு மனிதன் தன தனிப்பட்ட உணர்வுகளை ஒரு ஊடகத்தின் வாயிலாகத் தெரியப்படுதியிருக்கின்றான்., அவ்வளவே..
இந்தியாவில் உள்ள எந்தத் தொழில் செய்யும் தனி நபருக்கும் ஒரு அமைப்பில் சேர்ந்து செயல்படவோ அல்லது தனிப்பட்ட முறையில் இயங்கவோ நமது அரசியல் சட்டம் வழி வகுக்கிறது.
ஆனால் சினிமா துறையில் மட்டும் அது இயலாத விஷயம். காரணம் இவர்களுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த கட்சியின் முதல்வரை அடிவருடி விருது கொடுத்து , அரைகுறை ஆடைகளில் நடிகைகளை ஆட விட்டு ஆட்சியாளர்களுக்கு சாதகமாக் இருக்க வேண்டும்.
ஏன் ஒரு நடிகன் குரல் கொடுக்க வேண்டும் என்று இந்த சமூகம் எதிர்பார்க்கின்றது.
என்றைக்கு அவன் நடிகன் ஆகின்றானோ அன்றைக்கே அவனுக்கும் பொதுஜனத்திர்க்குமான தொலைவு அதிகரிக்கின்றது.
நன்றாக உற்றுக் கவனியுங்கள் இன்றைக்கு சரியாக எட்டு மாதத்திற்கு முன்னால் ஈழப் பிரச்னை வந்த பொது மேடைகளில் கலைஞரை எதிர்த்து ஆவேசமாக முழங்கியவர்கள் இந்த திரைத்துறையினர், இன்று அதே மேடையில் மூவுலகமும் நீதான், மூவேந்தனும் நீதான் என்று முழங்குகிறார்கள். இவர்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை கூட்டணி மாறும் அரசியல்வாதிகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம்.
எல்லா நாட்டிலும் சினிமா இருக்கின்றது, அது சமுதாயத்தில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்துவதில்லை . ஆனால் தமிழகத்தைப் பாருங்கள் எல்லாவற்றிலும் சினிமா நீக்கமற நிறைந்திருக்கின்றது.
தமிழ் நாட்டின் ஒவ்வொரு இளைஞனையும் ஒரு பெண்ணை காதலித்து மணந்து கொள்வதை வாழ்வின் லட்சியம் ஆக்கியிருக்கின்றது. நம்முடைய சுதந்திர, குடியரசு தினங்கள் ஏதாவதொரு அரைகுறை ஆடை நடிகையின் வாழ்க்கை சரித்திரத்தை பற்றிய பேட்டி இல்லாமல் முற்றுப் பெறுவதில்லை.
இவர்கள் எல்லாரும் உண்மையிலேயே சமூக அக்கறை உள்ளவர்கள் என்றால் நாட்டில் நடக்கும் வன்முறை பற்றியோ அல்லது சமூக அவலங்களைப் பற்றியோ வெளிப்படையாக தங்கள் படைப்புகளில் கூறுவார்களா...
முடியாது.. அப்படிஎன்றால் ஒப்புக் கொள்ளவேண்டியதுதானே நாங்கள் பணத்துக்காக பிணத்தை விற்கும் கூட்டம் என்று..
ஒரு வாரப் பத்திரிக்கையில் இரண்டு வரி கவிதை எழுதும் கவிஞனுக்கு இருக்கும் தைரியம் கூட இல்லாத முதுகேளும்பற்றக் கூட்டம்...
ஒன்றை மட்டும் தெளிவாகக் கூறுகின்றேன், நாளைக்கே இந்த நாடு சீனாவின் அடிமையானால் சிங்கார சீனத்திற்கு விழா என்று அவர்களுக்கும் விழா எடுப்பார்கள்.
பொதுஜனமே இவர்கள் யார் என்று இன்னுமா தெரியவில்லை..
பழங்கால மன்னர்களுடனும் , வெள்ளைக்கார துரைகளுடனும் அவர்கள் அவையிலேயே இருந்து அவர்களுக்கு அடிவருடிவிட்டு சமூகம் எக்கேடு கேட்டால் என்ன நாங்கள் நலமாக இருக்கின்றோம் என்று வாழ்ந்ததே ஒரு கூட்டம் அவர்களின் நவீன வடிவம் தான் இவர்கள்.........
No comments:
Post a Comment