Friday, January 16, 2015

பொங்கல் நல்வாழ்த்துக்கள் .....

                பொங்குக வளம் பொங்குக 
தமிழர்    நலம்  தங்குக 
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
இருந்த நன்நாடு 
எமக்கே எமக்காய் ஆகுக ..

உதிரம் உடமை   இழந்த பின்னேயும் 
உணர்வால் தமிழாய் ஒன்றாவோம் 
சாதியும் மதமும் பிரித்திட 
இயலா பிணைப்பாவோம் 

ஆங்கில மோகம் அறவே தவிர்த்து 
அகரம் ஊட்டி மழலை வளர்ப்போம் 
குறளும் நெறியும் பாரதி பாட்டும் 
பாங்காய் பகிர்ந்து  வளர்த்திடுவோம் 

ஓட்டு வங்கி அரசியல் இங்கே 
வேட்டி சேலைக்காய் இருந்தது போதும் 
நாட்டு நலம் காக்க நினைக்கும் 
நல்லவர் வந்திட வாக்களிப்போம் 

தமிழாய் தமிழராய் 
தமிழர் திருநாளில் 
நலமும் வளமும் 
பொங்கிட நல்வாழ்த்துக்கள் .....


No comments: