எதிர்பார்த்ததை விட அதிக பின்னூட்டங்கள் . நல்லது..!
நேத்திக்கு நண்பர் ஒருத்தரோட பேசிக்கிட்டிருந்தேன் . அப்போ கேட்டார் ,வீட்டுல பொண்ணு பாக்குறாங்க , எப்படி பொண்ணு வேணும்னு கேக்குறாங்க என்ன சொல்ல.?
நான் சொன்னேன் அம்பது கிலோவுல செவப்பா வேணும்னு சொல்லுங்கன்னு ..சும்மா காமெடி பண்ணாதீங்க தலைவா, ஏதாவது சொல்லுங்கன்னார்.
அய்யா கல்யாணம் பண்ணிக்கப் போறது ஒரு உயிர் அதுக்கும் உணர்ச்சிங்க இருக்குன்னு நெனச்சீங்கன்னாலே உங்க வாழ்க்க சொர்க்கமுங்க.
கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் சொல்றேன் பேர்வழின்னு அந்த புள்ளைய ரொம்ப பயப்படுத்தாதீங்க .அவங்க சொல்றதையும் கொஞ்சம் காது குடுத்து கேளுங்க அது பொய்யாவே இருந்தாலும்.
நீங்க நீங்களாவே இருங்க.
கல்யாணத்துக்கப்புற ம் வாழ்க்கைய ரசிங்க ,ரசிக்கக் கத்துக் குடுங்க . அப்ப ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கறதுக்காக ராத்திரியெல்லாம் காத்திருப்பீங்க.
கல்யாணம் ஆகிக் கொஞ்ச நாள் நம்ம சுதந்திரமே பறிபோன மாதிரி இருக்கும் . அது நிஜம் இல்லீங்க .அது தாங்க காதலோட ஆரம்பம் . எங்க போனாலும் சீக்கிரம் வந்துடுங்க , என்ன விட்டுட்டு தனியா போகாதேங்கம்பாங்க , அது தொல்லை இல்லீங்க அது எப்பவும் உன்னோடே இருக்கனுமுன்னு ஆசப்படறேண்டா மடையான்னு அர்த்தமுங்க.
உங்க அப்பா அம்மாவோட அவங்க நெருக்கமாயிட்டாங்கன்னாலே உங்களுக்கு பாதி பிரச்சனை இல்லீங்க.
சின்ன சின்ன ஜோக், சில்மிஷம் , நெறைய வெளையாடுங்க.
கண்ணாலப் பேசுங்க..
வீட்டுக்கு வந்ததும் வேலைய மறந்துடுங்க..வேலைக்கு வந்ததும் வீட்ட மறந்துடாதீங்க.
எங்கேயாவது வெளியப் போனீங்கன்னா நீங்களாவே போனப் போட்டு நான் வேலையா இருக்கேன். கூப்பிட நேரமாகுமுன்னு சொல்லிடுங்க. இல்லன்னு அவங்க போன் பன்ற வரைக்கும் காத்திருந்தீங்கன்னா உங்க பாடு திண்டாட்டம் தான் .
ரெண்டு பேருமா சேந்து வெளியில போனீங்கன்னா முடிஞ்ச வரைக்கும் கையக் கோர்த்துக்கிட்டே இருங்க அது உங்க அன்னியோன்யத்த அதிகப்படுத்தும். நெறைய பொம்பளப் புள்ளைங்க நம்மப் பதிவப் படிக்குறாங்க இருந்தாலும் சொல்றேங்க.
அந்த விஷயத்துல அவங்களோட ஆசை, வலி எல்லாத்தையும் புரிஞ்சிக்கோங்க ஏன்னா நெறைய கல்யாணங்கள் தோத்துப் போறதே அங்க தாங்க.
ஒரு முடிவு எடுக்கும்போது பேருக்காச்சும் அவங்களோட ஆலோசனைக் கேளுங்க.
சின்ன சின்ன பரிசுகள் குடுங்க விலை முக்கியமில்ல.
நீங்க ரொம்ப வருத்தமா இருக்கும்போது உங்க கோவத்த அவங்ககிட்ட காட்டாதீங்க , அதுக்கு பதிலா அவங்க மடியில சாஞ்சிட்டு மனசு விட்டு பேசுங்க.
சின்ன சின்ன வேலைகள பகிர்ந்துக்குங்க.
அய்யா காதல்னா பைக்ல பின்னாடி ஒக்கார வெச்சு, வீட்டுக்குத் தெரியாம போன் பேசி, கவிதை எழுதுறதில்லீங்க.
பரஸ்பரம் ஒருத்தொருக்கொருத்தர் காட்டுற அன்பும் மரியாதையும் தாங்க.
3 comments:
அய்யா, கல்யாணமாகாத மகரசங்கல்லாம் இதப் படிங்கய்யா முதல்ல..நண்பர் ஒரு வசகம சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கார் பார்த்தீங்களா "கல்யாணம் பண்ணிக்கப் போறது ஒரு உயிர் அதுக்கும் உணர்ச்சிங்க இருக்கு"..இததான் "உன்னை போல் பிறனையும் நேசின்னு" பைபிள்ல சொல்லிருகங்கய்யா ...இத பாலோவ் பண்ணுனாலே எல்லா நாளும் இனிய நாளுங்கன்னா
Suresh, wonderful words. Being a guy eagerly awaiting for the D-Day, this post is really worth a read.!! Thanks for posting
நல்ல குடும்ப நல ஆலோசகர் நீங்க ......
Post a Comment