Thursday, December 22, 2011

பொங்கி எழும் வீரம் - 2

                                               பெருந்தன்மையின் காரணமாக பெரும்பான்மை உரிமையை விட்டுக் கொடுத்த ஒரே இனம் தமிழினமாகத் தான் இருக்க முடியும். ஏற்றி விடுகின்ற ஏணியை மட்டுமே இன்னும் எத்தனை காலம் இருக்க இயலும் .
                               இந்திய தேசத்தின் ஜனநாயகக் கோட்டின் மீது நின்று கொண்டு ஆட்சியாளர்களை பிடித்து உலுக்கும் அத்தனை போராட்டங்களும் தமிழகத்திலேயே ஆரம்பிக்கின்றன.
                                          ஒட்டு மொத்த தேசமும் ஒடுங்கிக் கிடந்த காலத்தில் ஓங்கி ஒலித்த சுதந்திரக் குரல் வேலூர் கலகமாய் வெடித்துக் கிளம்பியது. அதற்கு பின்னால் தான் சுதந்திரம் என்ற வார்த்தையே மக்களுக்கு அறிமுகமானது. அதன் பின்பு மாற்றி எழுதப்பட்ட வரலாறு எதுவாய் வேண்டுமானாலும் இருக்கட்டும்.
                                                இன்னும் பின்னால் போய் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வீரனாய் , வீர சோழனாய் ஆண்ட இனம் எங்கள் இனம். நீர் , நில மேம்பாடு , பெண்ணுரிமை, ஒற்று , கடற்படை , ஆட்சி நிர்வாகம் , கட்டிடக் கலை, மத ஒற்றுமை போன்ற விஷயங்களில் உலகம் அ, ஆ... எழுதுவதற்கு முன்னால் கொடி கட்டி பறந்த இனம் எங்கள் இனம்...

                          மதத்தின் பேரால் ஈன சாதியின் பேரால் அடிமைப் பட்டு , அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு மொத்த தேசமும் உழன்று கொண்டிருக்கும் போது ஈரோட்டில் இருந்து வெண்தாடி கிழவன் ஒருவன் அறியாமை இருள் போக்கும் பகுத்தறிவு விளக்கோடு வந்தான்.....

                      அதே இனம் அடி வாங்கி அடி வாங்கி ஈழத்தில் திருப்பி அடித்தது. அடித்த கூட்டம் நேரே நிற்க முடியாமல் முதுகில் குத்த ஆயிரம் வழிகளைத் தேடியது..

                    முகத்தின் தோல்வி முதுகின் வெற்றியாக , ஒட்டு மொத்த தமிழினமும் ஒன்று பட்ட இனமாய் நிற்கின்றது ... இயல்பிலேயே நல்ல போராட்ட களமான வீர தமிழகம் , உணர்வுக்காய் நல்ல உரிமைக்காய் போராடியதெல்லாம் போய் இன்று உயிராதாரமாம் நீருக்காய் போராடத் துவங்கி விட்டது ....

                              வீர தமிழினமே காவிரியும் , வைகையும் , நமது கலாசாரம்  நமது வாழ்வியல். இந்த கரைகளின் ஓரத்தில்தான் சேரமும். சோழமும் தளைத்து வளர்ந்தன. இங்கே தான் நம் வரலாறு எழுதப்பட்டது......

                                     தமிழன் என்ற ஒரே காரணத்திற்காய் பாரதியும் , வ.உ. சி யும், சுப்ரமணிய சிவாவும்,திருப்பூர் குமரனும் சுதந்திர வரலாற்றின் பக்கங்களிலிருந்து கிழித்தெரியப்பட்டார்கள்......
                                      தமிழ் பேசிய ஒரே காரணத்திற்காய்  லட்சம் பேரை கொன்ற போதும் ஈழத்தின் வடு தெரியாமலே போனது .......
                                          எந்த இனம் இன்று நம் உரிமையை பறிக்க முயல்கிறதோ அந்த இனத்திற்காகவும் வைக்கத்தில் உரிமை போராட்டம் நடத்தியவர் தந்தை பெரியார்...
வந்தாரை வாழ வைக்கும் தமிழினம் வாழ்விழந்து போகலாமா...

அற வழியில் நிற்போம், அமைதி வழியில் போராடுவோம்... காந்தியும் பெரியாரும் கற்று தந்த பாடங்கள் ஓராயிரம் ...... என்றைக்கும் நமது மண்ணையும் உரிமையையும் விட்டு தர மாட்டோம்... 

No comments: