Tuesday, March 23, 2010

பின்னூட்டங்களுக்கு நன்றி..

நன்றி நண்பர்களே என்னோட என்ன எழுத இன்னைக்கு.. பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் என்ன மீண்டும் பதிவு எழுத சொல்லுது..

எல்லாருக்குமே பள்ளிக்கூடம் ஒரு மறக்க முடியாத ஒரு விஷயம் . யாரக் கேட்டாலும் எனக்குத் திரும்பவும் அந்த நாட்கள் வேணும்னு சொல்லுவாங்க. ஆனா உண்மையிலே நெனச்சுப் பாருங்க உங்கள்ள எத்தன பேரு அன்னைக்கு பள்ளிக்கூடம் போறத ரசிச்சு போனீங்க..
பள்ளிக்கூடம்னாலே வீட்டுப் பாடமும் மொரட்டுக் கம்போட வாத்தியார்களும் தானே முன்னாடி வருவாங்க..
எங்களுக்கும் அப்புடி ஒரு வாத்தியார் இருந்தார் உங்களுக்கும் அவர நல்லாத் தெரியும் கந்தசாமின்னு பேரு அந்த காலத்து ரஜினி படத்துல வர மாதிரி அகலக் கால் வெச்ச பான்ட்
கோடு போட்ட சட்ட, நெத்தியில நாமம்னு  ரெண்டு பக்கம் கண்ணாடி வெச்ச செவப்பு ஸ்கூட்டர்ல வருவாரு..
அவரப் பாத்தாலே புள்ளைங்களுக்கெல்லாம் பயம் . 33 % இல்ல 50 % இட ஒதுக்கீட அப்பவே அறிமுகப்படுத்துனவரு. ஆமா அடிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா அவருக்கு ஆம்புல பொம்பள கணக்கில்லா.a
அவருக்காகவே இந்த லீடர் நாதாரி வேற பச்ச பெரம்பு ஒடச்சுட்டு வரும் . அவனுக்குத் தெரியாம அத நான் பல நாள் மறைச்சு வச்சுருக்கேன்.
ஒவ்வொரு நாளும் பாடம் நடத்துறதுக்கு முன்னாடி தான் ராணுவத்துல வேல பாத்த கதைய சொல்லுவாரு.
பாறையில தண்ணிய போட்டா காணாம போற மாதிரி இருக்குற அவரு மூஞ்சி அந்த மல்லிகா டீச்சர பாத்தா மட்டும் பளிச்சுன்னு ஆயிடும்.பெரிய எடத்துப் பொண்ணு, அவங்க வகுப்புன்னாலே பசங்க ஆர்வமா காத்துருப்பாங்க. கஞ்சி போட்ட காட்டன் புடவையில கழுத்துல ஒத்தச் செயினும் , ஒரு கையில வாச்சுமா அவங்க அவ்வளவு அழகு .பெரிய வாத்தியார் உட்பட எல்லா வாத்தியார்களும் அவங்ககிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டுத் தான் போவாங்க. பள்ளிக்கூடத்துல ஏதாவது முக்கியமான விழான்னா டீச்சரோட அப்பா தான் மேடையில நடுவுல ஒக்காந்திருப்பார்.
ஏன்னு தெரியாது கந்தசாமி வாத்தியாரோட வகுப்புக்கு முன்னாடி அவங்க வகுப்பு இருந்தா பத்து நிமிஷம் முன்னாடியே வந்து காத்திருப்பாரு. ஆனா அவங்களோ இவர நேருக்கு நேரா கூட பாக்க மாட்டங்க.
ஒருநாள் எங்களுக்கு அரை பரீட்சை திடீர்னு ஒரே சத்தம் யாரோ நாலு பேர் கந்தசாமி வாத்தியாரப் போட்டு அடிக்குறாங்க. பள்ளிக்கூடமே சுத்தி நின்னு பாக்குது.எங்களுக்கு ஒரே கொழப்பம் , ராணுவத்துல என்னன்னவோ பண்ணுனேன்னு சொன்ன வாத்தியார் இப்புடி அடி வாங்குராறேன்னு.
மல்லிகா டீச்சர் மட்டும் ஒரு ஓரமா தேம்பி தேம்பி அழுதுட்டிருக்காங்க. அப்புறம் வாத்தியார போட்டு அடிச்சவங்க பெரிய வாத்தியார கூப்டு ஏதோ சொல்லிட்டு போனாங்க.ஒடம்பெல்லாம் காயத்தோட வாத்தியார் நொண்டிகிட்டே போயிட்டார் . அதுக்கப்புறம் அவரு பள்ளிக்கூடம் பக்கமே வரல. எங்களுக்கும் அரை பரிச்ச முடிஞ்சி லீவு விட்டுட்டாங்க .
லீவுல ஒருநாள் மாணிக்கம் வாத்தியார் மகனைப் பாத்தேன், அவன்தான் சொன்னான் , டீச்சரும் வாத்தியாரும் லவ் பண்ணாங்கன்னும் , அது டீச்சர் வீட்டுக்கு தெரிஞ்சு போயடுச்சுன்னும் .அடப்பாவிகளா நேருக்கு நேர் பாக்காதவங்க எப்படிடா லவ் பண்ணாங்க.
பள்ளிக்கொடம் தொறந்தப்புரம் கணக்குப் பாடத்துக்கு புது வாத்தியார் வந்துட்டார்.ஆனா டீச்சர் மட்டும் பள்ளிக்கொடத்துக்கு வந்துட்ருந்தாங்க. ஆனா யார்கூடயும் பேச மாட்டாங்க.நாங்கல்லாம் வகுப்புத் தேர்வு எழுதும்போது வாத்தியார் அடிவாங்குன மைதானத்தையே வெறிச்சு பாத்துக்கிட்டுருப்பாங்க.
ஒருநாள் ஊரே அல்லோகள்ளப் படுது. டீச்சர் வீட்டு முன்னாடி ஒரே சத்தம். எல்லாரோடையும் சேந்து நானும் ஓடிப்போய் பாத்தேன். டீச்சர் கழுத்து மட்டும் கயித்தோட சேந்து காலு ரெண்டும் அந்தரத்துலத் தொங்குது.
எல்லாருக்கும் ஒரே பதட்டம் வாத்தியாரையும் காணலையேன்னு .ஆறு குளமெல்லாம் தேடிட்டு எல்லாருக்கும் சந்தேகம் வந்து பள்ளிக்கூடத்துல தேடுனாங்க.
அங்க வாத்தியாரு மல்லிகா டீச்சர் வகுப்பு முன்னாடி காத்துக்கிட்டுருந்தாரு .....................


நாங்களும் சிறுகதை எழுதுவோம்ல  


3 comments:

karthee said...

மிக நீண்ட நாட்களுக்கு பின் ஒரு குறும்படம் பார்த்த நிறைவு,ஒரு அமைதி .அதென்னமோ டீச்சர் என்றாலே அப்படித்தானோ?ஒரு வேளை நம் சிறு பிராயத்தில் முதன்முதலாக வீட்டுக்கு வெளியே பார்க்கக் கூடிய நம்மை வழிநடத்தக்கூடிய பெண் என்பதால் கிடத்தட்ட இருபது வருடங்கள் கடந்தும் அவர்களை பற்றி யோசிக்கிறோம்?

நண்பர் சுரேஷ் அழகாக வெளிகொனர்ந்திருக்கிறார்,பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்

azhagu said...

arumai side gapla teecharayum site adichurukkeenga

kamalakkannan namai said...

enakkum ippidi oru vaathiyaar irundhaar