என்னுடைய போன "திரும்பிப் பார் ..." பதிவுக்கு வந்த மாறுபட்ட கருத்துக்கள் , புதிய பதிவு எழுதறதுக்கான கால அளவைக் கொஞ்சம் கூட்டிருச்சு.
ரொம்ப யோசிச்சு பதிவுலக சண்டையில நாமும் கலந்துக்குற மாதிரி எதையாவது எழுதி வெப்போம்னு தோணுச்சு.. அப்ப ரொம்ப நெருக்கமான சிலர் சொன்னாங்க உனக்கு சீரியஸ் ரோல் எல்லாம் ஒத்து வராது , காமெடி ரோலே பண்ணுன்னு....
என்னத்த சொல்றதுங்க
..
ஊரை விட்டு உறவை விட்டு எவ்வளவோ கஷ்டப்பட்டு நாமளும் இப்படி வெளிநாட்டுல வந்து பிழைப்பு நடத்துறோம். ஆனா வெளியில இருந்து பாக்குறவங்களுக்கு .
முதல் முதலா எர்போர்ட்டுக்குள்ள ஆத்தா கண்ணுல நீர் வழிய கைய்ய காட்டிக்கிட்டே ப்ளைட்ல ஒக்காந்தப்போ என்னவோ உயிரக் கழட்டி வெச்சுட்டு ஒடம்பு மட்டும் போற மாதிரி இருந்துச்சு.
வந்து எறங்குனவுடனே ராத்திரி எல்லாம் கொட்டக் கொட்ட விழிச்சு, பகலெல்லாம்
தூங்கின்னு ,நாளும் கெழமையும் புரியவே வாரம் ஒன்னு ஆச்சு..
வேல பாக்குற எடத்துல வெள்ளையா சிரிச்ச புள்ளை, இன்னொருத்தங்கிட்டேயும் சிரிச்சு பேசுனப்போ வந்த கோபம் இதெல்லாம் சாதாரனம்னு புரிய மாசம் ஒண்ணு ஆச்சு...
முந்தாநாள் பண்ணுன கொழம்பையும் சோத்தையும் மைக்ரோவேவ்ல சூடு பண்ணி தின்னப்போ ஆத்தா பண்ணுன ரசமும் சோறுமே சொர்க்கம்னு தூக்கம் வராம பொறண்ட ராத்திரிங்க சரியாக வருஷம் ஆச்சு....
பே செக் , கிரெடிட் கார்டு, வால்மார்ட் , சனிக்கிழமை பார்ட்டி , போன் கார்டுல தினம் பேச்சு , எப்புடி இருந்த வாழ்க்க எப்புடியோ மாறிப் போச்சு...
சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல் ஆகுமான்னு பாட்டப் பாடிக்கிட்டே சொந்தக்காரங்களுக்கு போன பண்ணா.. மாப்புள்ள ஒரு அவசரம் , ரெண்டு லட்சம் குடு அடுத்த மாசமே திருப்பி தரன்னு...
அடுத்த மாசமே திருப்பி தர முடியும்னா என்கிட்டே ஏண்டா கேக்குற...
ஆத்தா நல்லா இருக்கியா ,அய்யா நல்லா இருக்கியா.. அப்புடின்னு கேட்டு பேசுனதெல்லாம் போயி அங்க எடத்த வாங்கணும் இங்க வீட்ட வாங்கனும்னு காசும் பணமும் தான் கண் முன்னாடி நின்னுச்சு...
ஒர்குட்லயும் பேஸ்புக்லையும் ஏட் பிரண்ட்ஸ் ரெக்வஸ்ட் போட்டு விடிய விடிய கண்ணு முழிச்சு காலையில எழுந்தவுடனே பவர் பட்டனுக்கு தான் கை மொதல்ல போச்சு...
போனது போகட்டும் ஊருக்கு போகலாம்னு வந்து எறங்குன ஒரு வாரம் , கறியும் சோறும் பசங்களோட மட்டைன்னு , நல்லாதான் போச்சு..
தினம் போன ரோடு டிராபிக் புடிக்கல, பொரண்டு வெளயாடுன வீட்டுல வெக்க புடிக்கல, விடிய விடிய பாத்த டி வி புடிக்கல.
கூட்டம் , நெரிசல், பொல்யூஷன் , மேனர்ஸ்ன்னு எல்லாமே புதுசா ....
கெடச்ச ப்ளைட்ல ஒக்காந்து பனி கொட்டுற தரையில கால வெச்சவுடனே மனசுக்குள்ள என்னவோ ஒரு சந்தோஷம் ...
முந்தாநாள் பண்ணுன கொழம்பையும் சோத்தையும் மைக்ரோவேவ்ல சூடு பண்ணி .............
1 comment:
நல்ல பதிவு...உண்மைதான் ...போன் போட்டாலே காசு கேக்குறதும்,தூங்கி எழுந்த உடனேயே லேப்டாப் பவர் பட்டனுக்கு கைகள் போவதும் உண்மைதான்..ஆனால் எப்போதுமே நெரிசலும் கூட்டமும் பிடிக்காததேன்பதும் உண்மைதான்..அதும் காலை அலுவலக நேரங்களில் சென்னை ரெயில் சென்றவருக்கு அது நன்றாகவே புரியும்
Post a Comment