Wednesday, April 1, 2009

நாலு கரண்டி ஆங்கிலம் .. ஒரு கரண்டி தமிழ்....

welcome to ............. பாடல்
this program is sponsored by............

stay tune until the break

எல்லா தமிழ் தொலைக்காட்சிகளும்
அறிவிப்பாளர்களுக்கான
நேர்காணலின் போது
கேட்பார்களோ என்னவோ தெரியாது ..?
சொல்லி வைத்தார் போல்
வேக வேகமாக பேசுகின்றார்கள்
நாலு கரண்டி ஆங்கிலத்திற்கு
ஒரு கரண்டி தமிழ் சேர்த்து

நான் மிகவும் மதிக்கும் ஒரு
தொலைக்காட்சி நண்பர்
நேர்காணல்களிலும் விவாத
நிகழ்ச்சிகளிலும் தேர்ந்தவர்
அவரே மூச்சுக்கு முன்னூறு
முறை ஆங்கிலத்தில்தான் பேசுகின்றார் ..

தொலைக்காட்சி பார்ப்பதை
தேசியத் தொழிலாக
வைத்திருக்கும் இறையான்மையை
கட்டிக் காக்கும்
இந்திய தேசமோ
இன்னும் விழிக்காமலே தான் இருக்கின்றது

மனசாட்சியோடு தொலைக்காட்சிகளைப்
பாருங்கள்
மாமிசம் தின்று எலும்பைத்
துப்புவதைப் போன்ற செய்திகள்

முதுகெலும்பு தரையைத் தொடும் அளவுக்கு
குனிந்து நன்றி
சொல்லும்
நடனத் தாரகைகளின்
நாட்டிய நிகழ்ச்சிகள்

ஒன்றைப் பிரதிஎடுத்தாற்போல் ஒரே மாதிரியான
நகைச்சுவை நிகழ்ச்சிகள்
என்று எல்லா இடங்களிலும்

ஆங்கிலப் பைத்தியத்தின் கிறுக்கல்கள் கொஞ்சம்
அதிகமாகத்தான் இருக்கின்றன

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் காதலின் வெளிப்பாட்டை
உலகிற்கு சொல்ல மிஸ் யு செல்லம் , லவ் யு செல்லம் இரண்டு பேரின் பெயரை எழுதும் காதல் குறிப்புகளாக ஓடும் எழுத்துக்களில் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் லைலா மஜ்னுக்களும் , அம்பிகாபதிகளும் தங்கள் காதல் ராஜ்யத்தின் கொடியை பறக்க விடுகின்றார்கள்

நெடுந்தொடர் நாயகிகளின் தாலி பாக்கிய நடிப்புகள் அதோடு சேர்ந்த குடும்ப சண்டைகள் வில்லத்தனமான வக்கிரம் நிறைந்த குடும்பத்துக்குள்ளான சண்டை மூட்டல்கள்

குடும்ப சண்டைகள் பல பேர் முன்னிலையில் விவாத பொருட்களாகின்றன...

குஷ்புவுக்கு கோவில் கட்டி புண்ணியம் தேடிக் கொண்ட குடும்பத்து இளைஞர் ஒருவர் காதலிக்கச் சொல்லி காலில் விழும் கூத்துக்களோ கொஞ்சம் உச்ச கட்டம்..

ஆக மொத்தம் கண்ணை கட்டி காட்டில் விட்டு, மண்ணை அள்ளித் தலையில் போட்டு................

No comments: