Monday, March 30, 2009

ஈழத்து தாலாட்டு



ஆராரோ..! ஆரிரரோ..!
அய்யா நீ கண்ணுறங்கு..!
மடிமேல படுத்திருந்தா
குண்டு சத்தம் கேக்குமுன்னு
மண்ணுக்குள்ள தூங்க போன
அய்யா நீ கண்ணுறங்கு..!
தூக்கி வளத்த கைய்யு காலு
துப்பாக்கி கிழிச்சிசோ..!
ஊட்டி வளத்த வாய் உதடு
செல்லு வந்து துளைச்சுசோ..?
ஆராரோ....! ஆரிரரோ ..!
அய்யா நீ கண்ணுறங்கு..!
தப்பு ஒண்ணும் செய்யவில்ல
தமிழ் பேசிய பொறப்பத் தவிர..,
தரங்கெட்ட சிங்களவன்
வந்திடுவான் கண்ணுறங்கு..!
நாய்ஒன்னு செத்து போனா
நாலு நாய்ங்க கூட நிக்கும்..
நாதியத்த தமிழினத்துக்கு
எந்த நாய் கூட நிக்கும்...!
தாலாட்டு பாட வந்தேன்
ஒப்பாரி பாட வெச்ச..
மேல போகும் விமானம் காட்டி
நானுனக்கு சோறூட்ட ,
வந்துவிழுந்த குண்டு உன்
வாழ்க்கையைத்தான் அழிசிசே..
விடுதலைக்கு ஆசைப்பட்டு
விடியாத வாழ்க்கை வேணாம்..
வீடுவிட்டு நாடுவிட்டு
தெருசுத்தும் நெலம வேணாம்..

ஆத்தா நான் பாலூட்ட
நெஞ்சுலதான் பாலும் இல்ல
தூக்கிவைக்க கையும் இல்ல
அம்மாவ மன்னிச்சு
அமைதியா கண்ணுறங்கு



தாய் நானும் உன்கூட
வந்திடுவேன் சீக்கிரமா ..
ஆனாலும் எனக்கு இப்போ
கடமை ஒன்னு காத்திருக்கு

நாட்டோட விடுதலைய
நான் பாக்க
நீ சிரிக்க

தமிழீழம் போறந்திடுமே

விடுதலை தான் உயிர்மூச்சு
அடிமைத்தனம் அறுந்து போச்சு
தரணியெல்லாம் தமிழ் பாட்டு
சத்தமா கேக்க வேணும்
அதுக்கு நான் இன்னம் நூறு
புள்ளைய தான் பெக்க வேணும்

எல்லாம் முடிஞ்ச பின்னே
அம்மா நான் வந்திடுவேன்
கண்ணே ! ராஜாவே..!
கலங்காம தூங்கிடய்யா!

ஆராரோ ..!
ஆரிரரோ..!
அய்யா நீ கண்ணுறங்கு.....

No comments: