Saturday, April 18, 2009

துரோகம்........


நம்பிக்கையோடு சொல்லும் வார்த்தைகள் செய்தியாகும்போது அதில் துரோகத்தின் நெடி கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கின்றது.. அது அருகாமை நட்பிலிருந்தோ இல்லை நெருங்கிய உறவிலிருந்தோ கிடைக்கும்போது இதயத்தின் வலி சொல்ல இயலாத ஒன்று ...
கோபம் , கேள்வி அழுகை என்று எல்லாமே ஒன்று சேர்ந்து வரும் ..
கொஞ்சம் உற்று பார்த்தால் அவரவர் நிலைக்கும் சூழலுக்கும் அது சரியானதாகவேத் தோன்றும்
ஆனால் அதன் விளைவுகளின் பயங்கரம் கொடுமையானது . பிரிதல்கள் , தவறான புரிதல்கள் என்று வகையறுக்க இயலாது. வாழ்க்கைப் பாதையில் பிள்ளைக்கும் பெற்றோற்குமான துரோகம், கணவனுக்கும் மனைவிக்குமான துரோகம் , இவை எல்லாவற்றிலும் கொடுமையானது நட்பில் துரோகம்
நட்பின் உன்னதம் தன் தாய் கற்பானவள் என்ற நம்பிக்கையை விட அதிகமானது.
அதன் வஞ்சகம் நட்பை மட்டும் கொல்வதில்லை ....... எண்ணம் , செயல் ஊன் உறக்கம் , இவை எல்லாவற்றோடும் இணைந்த ஒரு உயிரையும் சேர்த்து...

No comments: