
மரணம் - இந்த சொல் ஏற்படுத்தும் தாக்கங்கள் தான் எத்துனை எத்துனை .இறந்தபின் எல்லாரையுமே "நல்ல மனுஷன் பொய் சேந்துட்டான் " என்று கூற வைக்கின்றது.
இழவு வீட்டிற்கு போயிருக்கிறீர்களா..?
இளம் வயதில் நிறைய முறை போயிருக்கிறேன் . எரியும் ஒற்றை குத்துவிளக்கு , இறந்தவரின் நற்பெருமைகளை வந்திருக்கும் ஆண்களெல்லாம் பேச, பெண்களெல்லாம் இறந்தவரின் மனைவியோ இல்லை தாயோ தமக்கையோ, யாராவது ஒரு உறவுப் பெண்ணை கட்டி அழுது கொண்டிருப்பார்கள் .என்றைக்கோ செத்த மாடு இறப்பின் அர்த்தத்தை புலப்படுத்த கொட்டாக, பரையாக நெருப்பில் வெந்து கொண்டிருக்கும் , வீடெங்கும் ரோஜா மணம் வீசும், வீதியெங்கும் பட்டாசு மணம் .
வருவோரும் போவோரும் தத்தம் கருத்தை சொல்ல தூர ஊரிலிருந்து வரும் ஒரு உறவுப் பெண் தெருக்கொடியிலேயே தன் ஒப்பாரியை ஆரம்பித்து விடுவார்
எல்லாம் முடிந்து இடுகாட்டிலிருந்து எல்லாரும் திரும்பி தத்தம் வீடுகளுக்கு செல்வர்
இறந்த வீட்டின் உறவுகளுக்கு தான் , அந்த தனிமையின் வலி தெரியும். அது இறப்பின் வலியை விடக் கொடுமையானது .
இறந்தவர் இளம் மனைவியை விட்டுச் சென்றிருந்தால் அவள் படும் துன்பம் யாரால் கூற முடியும் . உயிரோடு உயிர் சேர்த்த உன்னத உணர்வல்லவா அது.
"உயிரை உணர்வை எண்ணத்தை வாழ்க்கையை அல்லவா பகிர்ந்து இருந்தோம்.
எல்லா நாளும் உனக்கு முன்னே நான் எழுந்து நீ தூங்கும் அழகை நான் ரசித்து ,நீ செய்யும் செல்ல குறும்புகளுக்காக காத்திருப்பேன்..
இன்றும் அப்படிதான் காத்திருக்கின்றேன் ..
இனி நீ வருவாய் என வாசலை பார்த்திருப்பேனோ..
இல்லை வானத்தை பார்த்திருப்பேனோ..
வாழ்கை முழுதும் எனை கஷ்டப்படாமல் பார்த்திருப்பேன்
என்று உறுதி சொன்னாயே..
நான் உன்னோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்க
தனிமை கொடுமை அனுபவிக்க விட்டு எப்படி நீ போனாய்..
பிள்ளை நான் சுமந்த போது
என்னை நீ சுமந்தாய்..
இன்று மண்ணுன்னை சுமக்கும்போது
உன் எண்ணம் நான் சுமக்கின்றேன்..
நீ இறந்து போனதால் உன்னோடு சேர்ந்து நான் இறக்க விரும்பவில்லை
உன்னோடு வாழ்ந்த வாழ்க்கையை இன்னொரு முறை முதலிலிருந்தே வாழ விரும்புகின்றேன் .
வருவாயா.. மீண்டும் வருவாயா..
இறந்த பாவி நீ உன் உயிரோடு சேர்த்து உன் நினைவுகளையும் கொண்டு போகாததால் உன் ஒருநாள் மரணம் இனி ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையில்..
No comments:
Post a Comment