
30000 ரூபாய்க்கு செல்போன் வந்தால் யாரால் வாங்க முடியும்..?
5000 ரூபாய்க்கு வீட்டு வாடகை யாரால் கொடுக்க முடியும்..?
500 ரூபாய் கட்டணத்தில் யார் திரைப்படம் பார்ப்பார்கள்..?
சனிக்கிழமை dating ஞாயிற்றுக்கிழமை outing
பார்ட்டி , பீட்சா , ஐ போன், ஆர்குட் , லிவ்விங் together , mutual friends,
இவற்றில் ஏதாவது ஒன்று தெரியுமா..?
தெரியவில்லையென்றால்
" பக்கத்து வீட்டு ரமேஷுக்கு பெரிய
ஐ.டி கம்பெனியில் வேலைய்யாம் , நம்ம பையன் B.com., படிக்கும்போதுதான் அவனும் கம்ப்யூட்டர் படிச்சான் ,
இப்போ பாருங்க , 25000 சம்பளமாம் , கார்ல பிக் அப் , வெளிநாடு வேற போகப் போறானாம் ..."
என்று பாட்டாய்ப் பாடுவாரே உங்கள் மனைவி , அந்த ரமேஷிடம் கேட்டுப் பாருங்கள் .. அவர் சொல்லுவார்
மருத்துவக் கல்லூரியில் இருந்து வரும் எல்லாரும் நிபுணர் ஆகமுடியாது , ஆனால் கம்ப்யூட்டர் படித்த அத்தனை பேரும் சாப்ட்வேர் இஞ்சினியராம் அமெரிக்கா வேலையாம் ,
பெண்ணோ மாப்பிள்ளையோ ஐ.டி படித்திருந்தால் தான் வம்சம் தழைக்குமாம் ..
என்னையா நடக்குது இங்க..?
பூர்வீக சென்னை வாசி எல்லாம் தாம்பரம் தாண்டி செங்கல்பட்டு வரைக்கும் போயாச்சு..
தெருக்கோடி கூட ஒரு கோடி ரெண்டு கோடியாம்..
வீட்டு வாடகை , காய்கறி எல்லா பொருளும் சொன்ன விலைக்கு வாங்கிபோனால் சாமான்யன் என்ன சுடு காட்டுக்கு போய் பிணத்தையா திம்பான்..
இப்போ ஏதோ பிரச்சனையாம் எகானோமி, பக்கத்து வீட்டு மாமின்னு என்னன்னவோ சொல்றாங்க .. அமெரிக்கா இங்கிலாந்து எங்கயுமே வேல இல்லையாம் ..
ப்ரோஜெக்டு ப்ரோஜெக்டுன்னு என்னவோ சொல்லுவாங்களே அது வேற காலி
ஆயிடுச்சாம் ..
அய்யா சாமி ஒபாமா மகாராசா உங்களுக்கு கோடி நன்றி
இந்த பசங்களுக்கு உழைப்புன்னா என்னன்னு தெரியட்டும் ..
சிவாசி படத்துல நம்ம ரஜினிகாந்த வில்லன் கேப்பாரே..அந்த மாதிரி
அய்யா ஐ.டி காரங்களே படுபாவி பசங்க இப்ப்டி அவிங்களுக்கு தேவையானத எல்லாம் உங்கள படிக்க வெச்சு வேல குடுத்து ஏமாத்திட்டான்களே இப்போ என்ன பண்ணுவீங்க
ஈ.சீ.ஆர் ரோட்ல பைக்ல போவீங்களா...?
டெக்கான் க்ரோநிகள்ள சுடோகு போடுவீங்களா..?
பப்புல டிஸ்கோ ஆடுவிங்களா..?\
youtube ல வீடியோ போடுவீங்களா..?
இல்ல ஓட்ட ஒடசல் விக்குற ஒரு
வெப் சைட்டுக்கு கால் சென்டர் பண்ணுவீங்களா..?
உங்களுக்கு ஒக்காந்த எடத்துலயே செய்யுற மாதிரி ஒரு வேல இருக்கு
செய்யுறீங்களா..?
உருப்படியா ஏதாவது யோசிங்கய்யா உழைக்குரதுக்கு,,,?
No comments:
Post a Comment