Tuesday, August 16, 2011

பொங்கி எழும் வீரம்....


நேற்று தான் பூரித்தோம் சுதந்திரம் , சுதந்திரம் என்று .

ஒரே ஒரு கிழவன் கொஞ்சம் உணர்வோடு , மானத்தோடு புரையோடிக் கிடக்கும் ஊழலை எதிர்த்து தனி ஒரு மனிதனாக  போராட்டத்தில் இறங்க , விமர்சனத்தை கொஞ்சமும் தாங்க முடியாமல் சூடுபட்ட பூனையாக பயத்தில் கைது செய்து திகார் சிறைக்கு அனுப்பி இருக்கிறது கொடுங்கோல் காங்கிரஸ் அரசு.

லட்சம் கோடிகளை கொள்ளையடித்த கல்மாடியையும் , கனிமொழியையும் கைது செய்ய நாள், நட்சத்திரம்  பார்த்த பிரதமர் இப்போதைக்கு மட்டும் இத்தனை வேகமாய் எப்படி செயல்படுகிறார்.

ஒரு வேளை கிரண்பேடி சொன்னதை பொய் என்று நிரூபிக்க உண்மையிலேயே உணர்வு வந்து விட்டதா ..? என்ன...?

என்ன கேட்டார் அவர் உணர்வற்ற சமூகத்திலே , இந்த நாடு என்னுடையது , அதை திருத்த வேண்டியது  என்னுடைய கடமை என்று இறங்கினாரே அது தவறா..

இன்னும் யாரையெல்லாம் சிறைக்கு அனுப்பப் போகிறீர்கள் . மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு எங்களை தள்ளி விடும் காங்கிரஸ் அரசுக்கும் , மன்மோகன் சிங்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறுவதை  விட எதுவும் தெரியவில்லை...

நிமிர்ந்த நன்னடையும் , நேர்கொண்ட பார்வையும் என்றும் எங்கள் சொத்து .......
அதை வைத்து நாங்கள் நிச்சயம் வெல்வோம்...

அணி திரள்வோம் அண்ணா ஹசாரே தலைமையில்....




No comments: