Tuesday, March 29, 2011

தேர்தல் 2011


தேர்தல் கமிஷனின் அதிகார வலயத்துக்குள் ஆரம்பித்திருக்கிறது இந்தத் தேர்தல்.
வீரம் கொண்ட தமிழினத்தை மானம் விட்டு , விற்று அரசியல் ஏழைகளாக்க இலவசங்களை அள்ளித் தெளிக்கின்றன ஒவ்வொரு அரசியல் கம்பனிகளும் .

ஆமாய்யா எவன் அதிகம் காசு குடுக்கரானோ அவனுக்கு சீட்டு , ஜெயிச்சு வந்துட்டா கொள்ளையோ கொள்ளை . அப்போ அது பிசினஸ் , இதுங்கல்லாம் கட்சிங்க கெடயாது கம்பனிங்க ....

சாராயத்தை அரசாங்கம் விக்குது , கல்வியை தனியாருக்கு குடுத்துட்டு...

காவல் துறைன்ற பேருல உங்களோட பாதுகாப்புக்கு மட்டும் ஒரு துறை.  போலீஸ் ஸ்டேஷன் போனவங்களுக்கு நல்லாத் தெரியும் . மக்கள் பாதுகாப்ப விட மந்திரிங்க பாதுகாப்புக்குத் தான் அதிக முக்கியத்துவம்..

தேர்தல் கமிசனோட கொடுக்கு தேர்தலுக்கு அப்புறம் செல்லாது. கட்சிக் காரனுங்க கட்டப் பஞ்சாயத்து, அரசியல்வாதிங்க சொத்துக் குவிப்புன்னு இந்த தேர்தல் மட்டுமில்ல எந்த தேர்தலும் ஒரு மாற்றத்த கொண்டு வரப் போறதில்ல.

மக்கள் மேல ரொம்ப அக்கறை உள்ள வடிவேலு , விஜய்....
தூ.....தேறி...இவனுங்களுக்கு ஒரு பிரச்சன வந்த தெருவுக்கு வந்து பேசுறாய்ங்க....

உண்மையான ஆம்பள உங்க தெருவுல லைட் எரியலன்னோ இல்ல நீங்க தெனம் போற ரோடு சரியில்லன்னோ என்னைக்காவது ஒரு நாள் பேசி இருந்தீங்கன்னா அப்ப ஒத்துக்குறேன்...

எங்களுக்கு மிக்ஷியும் கிரைண்டரும் , காத்தாடியும் வேணாம்.... தினசரி வாழ்க்கைக்கு அத்தியாவசியமான மின்சாரம், குடிநீர், சுகாதாரம்,   இதக் குடுங்க மொதல்ல..

நம்மளோட அரசியல் சட்டம் இலவசமா டிவி குடுக்க சொல்லல , ஆனா கல்விய குடுக்க சொல்லி இருக்கு...

கூட்டணிங்கறதே சுய லாபத்த மனசுல வெச்சு மட்டும் தான் நடக்குது. மக்கள் ஒண்ணும  எல்லா எடத்துலயும் அறிவாளிகளா சுயேச்சை வேட்பாளர்கள தேர்ந்து எடுக்க போறதில்ல..

யார் வரணும் என்பதை விட யார் வரக் கூடாதுன்னு முடிவெடுங்க.....

இலங்கை பிரச்சனையில தமிழனோட நிலைப்பாடு ஒண்ணு போதும் அவன் எவ்வளவு பலவீனமா இருக்கான்னு சொல்ல.

ஆத்தா  அப்பன் இஞ்சினியரிங் படிக்க வெச்ச காசுல, காதுல ஐ பாட மாட்டிக்கிட்டு சினிமா கட்  அவுட்டுக்கு பால் ஊத்துற சமுதாயம் மட்டும் என்னத்த பெருசா கிழிக்கப் போகுது....
இப்ப இருக்குற அரசியல் வாதியோட பேரனோ பேத்தியோ தான் அப்பவும் அரசியல் பண்ணப் போறாங்க...

விளைநிலங்கள எல்லாம் பிளாட் போட்டு வித்து தீக்குறாங்க ... வெகு சீக்கிரம் சோத்துக்கு மத்த மானிலங்கள நோக்கி கைய்யேந்துற நெலம வரலாம்....

நம்ம ஊருடைய நீண்ட நாள் பிரச்னை உழைப்புக்கேற்ற ஊதியம் , இத ஏன் இன்னும் சட்டமாக்கல...

பள்ளிக்கூடத்துக்கு நம்பி அனுப்புற பிள்ளைங்கள சீண்டி பாக்குற வாத்தியார் மாதிரி ஆளுங்கள் ஒடுக்க ஒரு அவசரத் தீர்வு தேவை....

எல்லாத் துறைகளையும் தனியார் மயமாக்குற அரசு அலுவலகங்கள் நவீனப் படுத்தப்பட்டு தேவையான சான்றிதழ்கள் வாங்கறது எளிமையாகனும். 


இதப் பத்தி எல்லாம் எங்களுக்கு என்ன கவலை ... எங்களுக்குத் தான் வேர்ல்ட் கப் பைனல் பாக்கணும், புதுசா வர ரஜினி படத்துல ஹீரோயின் யாருன்னுத் தெரியனும்..........

No comments: