Friday, November 19, 2010

எட்டிப் பிடிக்க வானம்......


எட்டிப் பிடிக்க வானம்.....

வாழ்வின் சந்தோஷங்கள் என்ற எவற்றை நாம் வகைப் படுத்தி இருக்கின்றோம்.

  1. பணம்
  2. பணம்
  3. காதல்
  4. நட்பு
  5. குடும்பம்  
இவற்றை நமக்கு சொல்லிக் கொடுத்தது யார். நம்மைச் சுற்றியுள்ள இந்த சமூகம்.
இது சரியா...?


இருக்கலாம்..!


இருக்கலாம் என்றால், சந்தேகமா....................?
ம்ம்ம் தெரியலை....


என்னதான் சொல்ல வருகிறீர்கள்...?


ரகசியம் , ஆம் வாழ்வின் ரகசியம்


வாழ்வது எப்படி என்று சொல்லப் போகின்றேன், உங்களோடு சேர்ந்து நானும் கற்றுக் கொள்ளப் போகின்றேன்

  1. முதல் பாடம்
" நான் தூங்கும்போது தூங்குகின்றேன், சாப்பிடும்போது சாப்பிடுகின்றேன்"


இது எங்களுக்கு தெரியாதா....?


கொஞ்சம் உற்றுக் கவனியுங்கள்
 உங்களில் எத்தனை பேர் தூங்கும்போது தூங்க மட்டும் செய்கின்றீர்கள், சாப்பிடும்போது சாப்பிட மட்டும் செய்கிறீர்கள்.....


தூக்கம் என்றால் கட்டிலில் காலை நீட்டிப் படுத்தால் வந்து விடுமா.
சாப்பிடுவது என்றால் தட்டில் வித விதமாய் வைத்து கவளம் கவளமாய் விழுங்குவதா..


இதைத் தானே காலம் காலமாய் செய்து கொண்டிருக்கின்றோம்.


இல்லை, இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று கற்று கொள்ளப் போகின்றீர்கள்..


சாப்பிட, தூங்க, பேச, நடக்க, முக்கியமாய் சிந்திக்க.........




விரைவில் சந்திப்போம் 

No comments: