Monday, April 27, 2009

தமிழினப் புரட்சி தமிழீழ விடுதலை..

உணர்வு கொண்ட தமிழா
உன் உடம்பில் ஓடுவது தமிழ் இரத்தம் என்றால் ,
ஒன்றுபட்ட தமிழர்களின் போராட்டமே தமிழினத்தின் விடுதலைக்கு வழியாகும்
குட்டக் குட்ட குனியாதே
அடிக்க அடிக்க இரும்பும் வலுப்பெறும்
கல்லும் சிற்பமாகும்
அடிக்கட்டும் முதுகைக் காட்டுவோம்
சுடட்டும் நெஞ்சைக் காட்டுவோம்
இங்கு என்ன ஜாலியன் வாலாபாக்கா வந்துவிடும்..
உரக்கக் கத்து
உன் குரல் விண்ணை முட்டட்டும்
உறங்கும் தலைவர்களின் காதைக் கிழிக்கட்டும்

இனமான சொந்தமே..
இனத் தமிழச்சி கவிதாயினி தாமரை மானமுள்ள ஒருத்தி
அவள் குரல் உன்னை உறக்கத்திலிருந்து எழுப்பட்டும்
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும்

தேசியப் பாதுகாப்பு சட்டம் எத்தனை முறை பாயும்..?

நம் இரத்த உறவு அங்கே இழவு வீட்டில் இருக்க நமக்கு இங்கே தொலைகாட்சி சிருக்கிகளோடு கூத்தா
உண்ணாவிரதம் , தந்தி அடிப்பு கண்ணீர் அறிக்கை என்று எந்த நாடகமும் வேண்டாம்
வீதியிலே இறங்கிப் போராடுவோம்

இனி தமிழனை அடித்தால் அடிப்பவனுக்கு வலிக்க வேண்டும்

வெல்லட்டும் தமிழினம்
வீரமுள்ள ஒரு இனம்..........

சங்கே முழங்கு.......

No comments: