அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை ஒவ்வொரு தமிழனின் நெஞ்சினில் வைத்தேன்
வெந்து தணிந்திடும் உலகம்..
இது வேண்டாமென்றே ஈழத்தில் கலகம் .....
செஞ்சோற்று கடன் தெரியுமா
இனமான சொந்தமே..
நீ தமிழனென்றால்
உன் தாயின் தாலி அறுத்தவன்
உன் தங்கைமார்களின் கற்பைக் கெடுத்தவன்..,
உன் பிள்ளைகளின் கனவை அழித்தவன்..,
இன்று மொத்தமாய் உன் வாழ்வையே அழித்துவிட்டான்..
இந்த கபட வேடதாரிகலாம் பதவி வெறிபிடித்த மஞ்சள் துண்டும் , பச்சை புடவையும், கதர் சட்டையும் ஒரு நாள் உங்களை எவனுக்காவது விற்று விடுவார்கள், இல்லை அங்கே விழுகின்ற குண்டு உங்கள் தலை மீது விழும்போது இன்றைக்கு இருப்பதைப்போல ஒரு உண்ணாவிரதமோ இல்லை நடிப்பு அறிக்கையோ தான் விடுவார்கள்..
இனமான சொந்தமே உன் உடம்பில் ஓடுவது தமிழ் இரத்தம் என்றால் ஈழத்தமிழனுக்காய் ஒரு சொட்டு கண்ணீர் விடு.....
அங்கே சாகின்ற என் சொந்தங்களுக்காய் உரக்கக் குரல் குடு..
உன் குரல் விண்ணை முட்டட்டும்
நம் இனத்தை அழிப்பவன் காதை கிழிக்கட்டும்..
என் உடம்பின் சாம்பலிலும் தமிழ் தான் மணக்க வேண்டும்
நெஞ்சு வலிக்கிறது ... கண்ணிலே விட கண்ணீர் தீர்ந்து பொய் இரத்தம் தான் வருகின்றது..
இப்படியே போனால் புதுமாதலன் வைத்தியசாலையில் இருப்பவர்கள் மட்டுமல்ல எனக்கும் தான் பித்து பிடிக்கும்..
அழிவது என் இனம் , அங்கே அழுவது என் தாயும் தமக்கையும் என் சொந்தமும்..
என்ன சொல்ல , பல ராத்திரிகள் இப்படி புலம்பியே தான் கழிகின்றது
தைரியமிருந்தால் எங்கள் நெஞ்சிலே குத்து , வெள்ளை முகத்தில் கறுப்புத் துணியை போட்டுக் கொண்டு என் இனத்தின் இரத்தம் குடிக்காதே...
No comments:
Post a Comment