Saturday, April 25, 2009

நவீன சூர்பனகை..

எனக்கொருவன் மூக்கறுத்தான், எல்லாருக்கும் மூக்கறு என்றால் சூர்பனகை,
இந்த நவீன சூர்பனகயோ,

என் தாலி அறுந்து போச்சு
இலங்கையிலுள்ள அத்தனை தமிழ் பெண்களின் தாலியையும் அறுத்து விட்டு தான் அமர்வேன் என்று கங்கணம் கட்டி கொண்டிருக்கின்றாள் ..
எங்கிருந்தோ வந்து என் தேசத்தில் அமர்ந்து குள்ளநரி மதியோடு பழி வாங்கி கொண்டிருக்கின்றாள்..

என் இனமானத் தமிழன் ஈழ தேசத்தில் பிச்சை என்று ஒன்று இல்லாமல் இருந்தான்..
இன்று என் மொத்த இனத்தையே பிச்சைக்காரர்களாக்கி , நாடோடிகளாக்கி தெருதெருவாய் அலைய விட்டிருக்கின்றாயே ......

உண்மையான உணர்வோடு , தமிழின மானத்தோடு , நெஞ்சம் கலங்க சொல்கின்றேன் ..

தமிழினம் வெல்லும் , தமிழீழம் பிறக்கும்
அன்றைக்கு உன் வெள்ளை முகத்தில் கரியை நீயே பூசிக் கொள்

விழுந்தால் நாங்கள் விதையாய் விழுவோம்
எழுந்தால் மீண்டும் மலையாய் எழுவோம் ..............

No comments: