Sunday, April 19, 2009

ஞாயிற்று கிழமைகள்..

தானாகவே ஒரு சோம்பல் வந்து ஒட்டி கொள்ளும் . மெதுவாக எட்டு மணிக்கு எழுந்து காலாற தோட்டத்தில் நடந்து தேநீர் குடித்த படி பத்திரிக்கை வாசிப்பு.
பின்னர் ஓடி ஓடி உழைக்கும் வாகன துடைப்பு
பிள்ளைகளுடனான அளவளாவல்
சமையல்கட்டு இருக்கும் திசையை தேடி கண்டு பிடித்து மனைவிக்கு கொஞ்சம் ஒத்தாசை
மணக்கும் மசாலாவோடு கறி குழம்பு சமையல்
மின்சாரம் போன மதியான வேலையில் வெப்ப காற்று தாலாட்ட ஒரு தூக்கம்
நண்பர்களுடனான அரசியல் விவாதம்
எல்லாம் முடிந்து எட்டு மணி படுக்கையில் விழும்போது
அடுத்த நாளுக்கான வேலை
ஏதோ அந்நிய கிரகத்தைப் போல முன்னாள் நிற்கும்
என்றாலும் அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்காய் இப்போதே மனம் ஏங்கத் துடிக்கும்...................

No comments: