Sunday, April 19, 2009

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ....

பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி

ஏப்ரல் 19,2009,15:56 IST





சென்னை: விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்னுடைய நண்பர் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரபாகரன் எனது நண்பர்; விடுதலை புலிகளின் கொள்கை உன்னதமானவை; தமிழ் ஈழம் உருவாக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்; அவர்களது கொள்கை சரியா

னது; ஆனால் அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சி தான் தவறானது; பிரபாகரன் என்னுடைய நல்ல நண்பர்; அவர் பயங்கரவாதி இல்லை; விடுதலை புலிகள் இயக்கத்தில் இருப்பவர்களில் சிலர் மட்டுமே பயங்கரவாதிகளாக உள்ளனர்; அதற்கு பிரபாகரன் என்ன செய்ய முடியும்; அங்கு தமிழர்கள் இடையே ஒற்றுமை உணர்ச்சி இல்லாததே தொடர்ந்து போர் நடந்து வருவதற்கு காரணம்; இந்த போரில் ஒருவேளை, பிரபாகரன் கொல்லப்பட்டால் அது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். கருணாநிதியின் இந்த பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments: