Saturday, April 18, 2009

வருன் காந்தியும் வர்ணக் கொடி கட்சிகளும்...


வருன் காந்தியின் பேச்சினால் யார் உண்மையான பயனாளி..

காங்கிரஸ் : மிகுந்த குழப்பத்தில் உள்ளார்கள் . கொதிக்கும் உலைக்கு வருண் என்கின்ற மூடி போட முயல்கின்றார்கள். அதை விட அதிகமாக வருண் காந்தி எங்கே ராகுலுக்கு சரியான போட்டி ஆகிவிடுவாரோ என்ற பயம் வேறு. வருண் வந்துவிட்டால் ஹிந்து முஸ்லீம் ஓட்டுகளின் பிரிதல் நடந்து விடுமோ என்ற பயம்.. ஆக மொத்தம் செவாலியே வாங்க தயார்...

பா .ஜ . க. : நன்றாக உற்று கவனித்துக் கொண்டிருக்கின்றது..எல்லாவற்றிற்கும் பின்னால் இருந்து இயங்கினாலும் , காங்கிரஸ் ஆரம்பித்திருக்கும் இந்த யுத்தம் தங்களுக்கு மிக சாதகமாக அமையும் என்ற எண்ணம்.. அவர்களுக்கு தெரியாது நவம்பர் 26 தாக்குதல்களுக்கு பிந்தைய வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று..

மூன்றாவது அணி..
நேரம் பார்த்து கட்டம் கட்டி முஸ்லீம் ஓட்டுக்கள் வாங்குவதே ஒரே குறிக்கோள் .
அதற்காக மிக அமைதியான காத்திருத்தல் நடந்து கொண்டிருக்கின்றது

எல்லாம் சரிதான் பேசியவரோ தூண்டியவரோ துப்பாக்கி பாதுகாப்போடு குண்டு துளைக்காத கார்களில் தேர்தலுக்குப் பின் போய் கொண்டிருக்க ரயில் எரிப்புகளிலும், கலவரக் காலங்களிலும் சிக்கித் தவிக்கப் போவது நாமாகவே இருப்போம்....

No comments: