Wednesday, March 18, 2009

தமிழ் சினிமா






1940 களில் மெதுவாக புராணப் படங்களிலிருந்து குடும்ப மற்றும் சமூக அம்சங்களைக் கொண்ட திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்தன. சுதந்திரத்திற்கு பின்னர் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மாற்றாக மக்கள் திராவிட
முன்னேற்ற கழகத்திற்கு தங்களைத் தயார்படுதிக்கொண்டிருந்த காலம் , கதையின் நாயகர்கள் நல்லவர்களாகவும் ஊருக்கு உழைப்பவர்களாகவும் மார்க்சிய கம்யூனிச சித்தாந்தங்களை பரப்புவோரகாவுமே கான்பிக்கபட்டிருந்தனர் . அப்போதுதான் அரசியலோடு இயந்த சினிமா மக்களுக்கு அறிமுகமானது .
திரையில் நல்லவர்களாகவே பார்த்து பழக்கப்பட்டிருந்த நாயகர்கள் நல்ல ஆட்சியாளர்களாகவும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் வந்து ஓட்டெடுப்பில் மிகுந்த வெற்றி பெற்ற M.G.R அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றார் . அவருடைய ஆட்சியும் கட்சியோடும் சேர்த்து சினிமாவும் வளர ஆரம்பித்தது
பிந்தைய எழுபதுகளில் பாரதிராஜா போன்ற வித்தியாச கதைக் களங்களைக் கொண்ட திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்தன. அன்றைய சூழலில் வேலை வாய்ப்பும் வறுமையும் முக்கிய ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டன . கலாசார உடைதெரிதல்களும் காதல் திருமணங்களும் கோடம்பாக்கத்து காரர்களின் தொடர்ந்த வெளிப்பாடாக அமைந்திருந்தன. சாதீய அடிப்படையிலான பிரிவுகளை மாற்றக் கூடிய சக்தியாக சினிமா அமைந்தது பாராட்டப்பட வேண்டிய அவசியம் . இதில் "புதுமைப்பெண்" போன்ற பெண்ணிய கருத்துகளும் விசு போன்றோரின் குடும்ப சூழல் மாற்றங்களைக் கொண்ட படங்களும் நிச்சயமான ஒரு எதிர்காலத்தையே கொண்டிருந்தன. இவை எல்லாவற்றிற்கும் முன்னோடிகளாக ஸ்ரீதர் , மகேந்திரன், கே. பாலசந்தர் போன்ற இயக்குனர்கள் இருந்தனர்.

இவை எல்லாவற்றிற்கும் ஊடாக மெதுவாக ஒரு அழுகலும் ஆரம்பித்திருந்தது , அது காந்த்களின் வளர்ச்சியும் , தனிமனித துதிகளும் அதிகரிக்க ஆரம்பித்தது . இந்த சூழலே பாமரனை சினிமாவோடு ஓட்ட வைத்தது, அதே நேரம் அவனுடைய வாழ்க்கையை பிரித்து போட்டது .
நாட்டுக்கு உதவ வேண்டிய இளைஞர் சக்தியை கட் அவுட் களின் கட்டளிலும் , ரசிகர் மன்ற துவக்கல்களிலும் கட்டிபோட்டு வைத்தது .

எவ்வளவு வலிமையான ஒரு சக்தி , இன்று கதாநாயகிகளின் ஆடை சரிவுகளிலும் , ஒற்றை ரோஜவுடனான காதல் துரத்தல்களிலும் சிக்கி புரையோடி பொய் இருக்கின்றது .

இந்த இளைஞர் கூட்டம் தானாக திருந்துமோ இல்லை தானை தலைவர்களின் , புரட்சி தளபதிகளின் குரல் கேட்டு திருந்துமோ...
எப்படியாயினும் வலிமை மிக்க இந்த இளைஞர் சக்தியை எங்களுக்கு மீட்டு தர வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு.....

No comments: