Thursday, March 19, 2009

அன்பார்ந்த ரசிக பெருமக்களே..

மலர்தூவல்களோடும் முழக்கங்களோடும் திரையில் அறிமுகமாகும் நாயகர்கள் தங்கள் நிஜ முகத்தைக் காட்டுவது எப்போதாவது தான். ஓடாதத் தன் திரைப்படங்கள் ஓடியதாக ஊர் முழுக்க விளம்பரம் செய்த நடிகர் ஒருவர் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டார். அப்போது அந்த இளைய தளபதியின் படை வீரர்கள் போட்ட சத்தம் கேட்டு அவருக்கு நிஜமாகவே வீரம் வந்து விட்டதாம்..
நான் கூட நாட்டில் நடக்கும் சமூக அவலங்களை பார்த்து சும்மா இருந்தபோதும் ஈழத்தில் ஈவு இரக்கமின்றி தமிழர்களின் கொலையை கண்டித்து உண்ணவிரதம் இருந்தபோதும் வீரம் இருக்கிறதோ..?இல்லையோ..? என்று சந்தேகிதிருந்தேன்.

ஆனால் உங்களுடைய படத்தின் முதல்நாள் காட்சிக்காக கால்கடுக்க நின்று, தாய் தந்தையர் பெற்ற பயனைஎல்லாம் உங்கள் கட் அவுட் கு பாலபிஷேகம் செய்து அடைந்து, உங்கள் பிறந்தநாளுக்கு கொடிகட்டி, உங்களைத தலைவனாக்கி, எதற்கு கொடுக்கிறோம் என்று தெரியாமல் ஒரு டாக்டர் பட்டமும் கொடுத்து ஒவ்வொரு காசாலும் உங்களை உயரத்தில் உட்கார வைத்த முட்டாள் தமிழனை பள்ளிக்கூட வாத்தியாரைப் போல் மேடை நாகரீகம் , பொது நாகரீகம் என்று எதுவுமே தெரியாமல் திட்டியதன் மூலம் உங்கள் வீரத்தை நிரூபித்து விட்டீர்கள்..

வாழ்க உங்கள் வீரம்...! வளர்க தமிழன் மானம்...!

No comments: