Sunday, August 29, 2010

உலக மயமாக்கலும் உளுந்து வடையும்..

போனபதிவு போட்டதுக்கப்புறம், யோவ்..? உன் சோம்பேறித்தனத்துக்கு ஒரு   அளவில்லயான்னு கண்டபடி திட்டிபுட்டாய்ங்க .அதான் மூளையக் கசக்கி நாட்டுக்கு ஒரு நல்ல விஷயம் சொல்லலாமேன்னு..
ஆமா உலகமயமாக்கல், உலகமயமாக்கல் அப்புடின்னு சொல்றாங்களே ,  அப்புடின்னா என்னான்னு எங்க ஊரு மேஸ்த்திரி மாமா கேட்டாரு, அது ஒண்ணும் இல்ல  மாமா
, இப்போ நம்ம ஆயா, ஊருல இருக்குற செட்டியார் கடையில உளுந்தும் , செக்குல ஆட்டுன எண்ணையும் வாங்கி வடைய சுட்டு வித்துட்டிருக்கு..
இதுல வரவுக்கும் செலவுக்கும் போக நல்ல வருமானம் . ஆயாவோட சுருக்குப் பை கணம் அதிகமாவுரதப் பாத்த ஒரு பெரிய மனுஷன் அரசாங்கத்துக் கிட்ட பேசி ஒரு திட்டம்
போடுறான்.
திடீர்னு ஒரு நாள் ஆயா வடையெல்லாம் சுட்டு விக்குறதுக்குக் காத்திருக்கும்போது ,
சரரு புர்ருன்னு நாலு கார்ல கோட்டு  சூட்டு போட்ட பெரிய மனுஷன் வந்து இறங்குறான். "இங்க பாரு ஆயா இனிமே இந்த ஊருல நீ உளுந்து வடை விக்க முடியாது, ஏன்னா அரசாங்கம் இந்த ஊரோட வளர்ச்சிக்காக உளுந்து வடை விக்குற மொத்த உரிமையையும் எங்கிட்டக் குடுத்துருச்சு, அதனால நீ வேற ஏதாவது பண்ணி பொழச்சுக்கோ அப்புடின்னுட்டார்..."
ஆயாவுக்கு ஒண்ணுமே புரியல... , இது என்னடா வம்பாப் போச்சுன்னு அழுவ ஆரம்பிச்சிடுச்சு,ஆயாவுக்கு தல சுத்திப் போனதே பெரிய மனுஷன் சொன்ன அடுத்த விஷயத்துலதான்  " இதோப் பாரு ஆயா, இனிமே நீ வட்ட வடிவத்துல வடை சுடவே முடியாது, ஏன்னா  இந்த வடிவத்துக்கான காப்புரிமை எங்கிட்ட மட்டும் தான் இருக்கு அப்புடின்னு .."
ஆயாவும் வேற வழியில்லாம கடலைப் பருப்ப வாங்கி நீள   நீளமா வடை சுட்டுப் போட்டுச்சு , ஒரு ஈ காக்கா வரல கடைப் பக்கம் , கொஞ்ச நாள் கழிச்சி  ஆயா கடைய மூடிட்டு  அந்த பெரிய கடைக்கு மாவாட்டிக் குடுக்குற வேலைக்குப் போயிடுச்சு , யூனிபார்ம் குடுத்தாங்க , கார்ல பிக் அப் பண்ணாங்க அதோட ஆயாவோட பேரையும் ஆஞ்சலினா ஜோலின்னு மாத்திப் புட்டாங்க, ஆயா சீக்கிரமே ஆப் ஷோர்னு அமெரிக்கா  போகப் போகுதாம்...
இது ஒரு பக்கம் இருக்க ஆயா கடைய மூடுன உடனே மளிகை கடை செட்டியாருக்கு ஒரே சந்தோஷம் , பெரிய கம்பெனி வந்துடுச்சு, இனிமே நம்ம கடையுல வியாபாரம் கொடி  கட்டிப் பறக்கப் போகுதுன்னு கம்பெனி மொதலாளிக் கிட்ட பேசப் போனார். அப்ப அவரு போட்டாரே ஒரு போடு ,
"நீங்க சொல்றதெல்லாம் சரிதான் செட்டியாரே ஆனா பெரிய கம்பெனி இல்லையா , அதனால நாங்க எல்லாப் பொருளையும் உற்பத்தியாளர்ங்ககக் கிட்ட இருந்து நேரடியாவே வாங்கிக்கரோம்னு அவரு பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டார். அது மட்டுமில்லாம வடை கடை தொறந்த கொஞ்ச நாள்லயே உள்ளூர் மந்திரிய வெச்சி ஒரு ஷாப்பிங் மாலையும் தொரந்துப்புட்டாய்ங்க ....
சரி அப்புடி என்னதான் அங்க விக்குராய்ங்கன்னு பாத்தா, ஆயா சுட்ட அதே வடைய அழகா பேக் பண்ணி வெள்ளையா ஒரு நடிகையோட விளம்பரத்தப் போட்டு 10 ரூவாய்க்கு வித்துக்கிட்டு இருக்காய்ங்க. அத நம்ம பசங்களும் ஏதோ அந்த நடிகையே சுட்ட மாதிரி ஒரு கோக்க குடிச்சுக்கிட்டே சாப்டுடிட்டுருந்தாயிங்க ......
விஷயம் தெரியுமா மாமோய் நம்ம செட்டியாரோட பையன், அப்புறம் நம்ம ஆயாவோட பேரன் எல்லாரும், வெளிநாட்டுல இருக்குற வடை கம்பனிகள்ள வடை சுடுறத பத்தின படிப்பு சொல்லித் தர காலேஜ்ல ஒண்ணாப் படிக்குராங்களாம்  ...
வெளிநாட்டுல கை நெறைய சம்பளமாம்..........................................................................................

8 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை.......

nis said...

நல்லா இருக்கு

சுரேஷ் சே said...

நன்றி அன்பர்களே தொடர்ந்து ஆதரவு கொடுங்க....

என்னது நானு யாரா? said...

உலக மயமாக்கலை பற்றி எளிமையா சொல்லி இருக்கிறீர்கள்! நல்ல விஷயம்! தொடருங்கள்

சுரேஷ் சே said...

கண்டிப்பா ... ரொம்ப நன்றி....

karthee said...

எளிய மொழியில் பாமரனும் புரிந்து கொள்ளும் விதமாக எழுதியிருக்கிறார்.உலகமயமாக்கலால் கடைகோடி மனிதனுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதே உண்மை.உலகமயமாக்கலால் ஏற்படும் பின்விளைவுகளையும் ,அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் எழுத வேண்டுகிறேன்..கட்டுரைக்கு பொருத்தமான படம் இதை தவிர வேறு இருக்க முடியாது..வாழ்த்துக்கள்.

சுரேஷ் சே said...

நன்றி கார்த்தி ....

vasan said...

வ‌டை விக்க‌, மால் க‌ட்ட‌றதுக்கு ரோட்டுப் ப‌க்க‌ம்
இருக்கிற‌ நல்ல‌ ந‌ஞ்சையை,வாங்கி வாய்க்க‌லையும்
மேடாக்கி,ப‌க்க‌த்து நிலத்தையும் பார்க்கிங்க்கு ஆக்கியாச்சு.
ப‌ழைய‌ விவ‌சாயி, வீணாப்போன‌ விவ‌சாய‌த்தால‌, துண்டை
த‌லையில‌ போட்டார். க‌ட‌ன்கார‌ன் தொல்லை தாங்காம‌
க‌டைசில‌ க‌ழுத்துல‌ மாட்டிக்கிட்டு மாண்டு போனார்.
அவ‌ரி இட‌த்தையும் வ‌ளைச்சு, மாலுக்கு விள‌ம்ப‌ர‌ப்
பேன‌ர் வைச்சாங்க‌,சூப்ப‌ர் ஸ்டார்/கிரிக்க‌ட் ஸ்டார் போஸ் குடுத்து,
'வ‌டை சாப்பிட‌லைனா, வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையை ருசி'ங்கிற‌ங்க‌.
அவுங்க‌ளே சொல்லிட்டாங்க‌ன்னு, கிராம‌ம்பூர‌ மால்ல‌ வ‌டை சாப்பிட‌,
வீடு, வாச‌ல்,வ‌ய‌ல‌ வித்துபுட்டு வ‌ருசைல‌ நிக்குது.
அந்த‌ ஏரியா அர‌சிய‌ல்வாதிக்கு ம‌ட்டும் மால்ல‌யிருந்து மாதாமாத‌ம்
த‌னியா பார்ச‌ல் போகுதாம்.