Monday, April 5, 2010
என்ன கொடுமை சார் .........
அடப்பாவிகளா ஏதோ கல்யாணத்துக்கு ஐடியா கேட்டாரேன்னு சொன்னா என்ன என்னவோ அட்வைஸ் அம்புஜம் மாமி ரேஞ்சுக்கு பில்ட் அப் பண்ணி ,என்னன்னவோ கேக்குராய்ங்க.
அதுக்கெல்லாம் அன்புள்ள அந்தரங்கம்னு தனியா ஒரு பகுதி வரும்யா எல்லா பத்திரிக்கயிலையும்,அங்கக் கேளுங்க. இருந்தாலும் பயபுல்லைங்கள்ள நல்ல புள்ளயா என்ன நாசூக்கா திட்டுன செழியனுக்காக இந்தப் பதிவு.
கல்யாணம் பண்ணா என்ன பண்ணனும்னு சொன்னீங்களே அதுக்கு மொதல்ல காதலிக்க வேணாமா. .? நல்லா வயித்தெரிச்சலக் கெளப்பாதீங்கன்னு சொன்னார். சரிய்யா..
அய்யா காதல் எப்ப வரும்னு தெரியாதுங்க நாலாப்பு அஞ்சாப்பு படிக்கும்போது கூட படிச்ச கண்மணியோட சேந்து வெளையாண்டா ஒரு சந்தோஷம் வந்துச்சு. திருவிழாவுல எங்கப்பாரு வாங்கிக் குடுத்த செவப்புக் கண்ணாடியப் போட்டுக்கிட்டு கையில பிசுபிசுன்னு வாச்சு மிட்டாயக் கட்டிட்டு அவகூட வாய்க்கா வரப்பெல்லாம் புழுதி தலை முடியிலெல்லாம் ஏறுற அளவுக்கு சுத்துனனே அதுவா..
இல்ல பத்தாம் கிளாஸ் படிக்கும்போது கூட படிக்குற செல்வி வரதுக்காக எட்டு மணிக்கே சைக்கிள எடுத்துட்டுப் போய், கொஞ்சம் கொஞ்சம் வளர்ற மீசைய தடவிக்கிட்டே நின்னு, பசங்கெல்லாம் பள்ளிக்கூட மரத்துல எம்பேரயும் அவ பேரையும் எழுதி வெச்சான்களே அதுவா..
எதுன்னுத் தெரியாமலே பொலம்பிட்டிருந்தப்போ 12 ஆம் கிளாஸ் லீவு வந்துச்சு. எப்பிடியும் பாசாயிடுவோம்ற நம்பிக்கையில சச்சினு கணக்கா கிரிக்கெட் பேட்ட கீழ வைக்காம திரிஞ்ச நேரம். அப்பதான் பக்கத்து வீட்டுல ஒரு குயில் . ஆமாங்க குயில் தான் குரல் நல்லா இருக்குற எல்லா பிகரும் குயில் தான். யாருடான்னு எட்டிப் பாத்தா அந்த வீட்டுல யாருமே சீண்டாமக் கெடந்த நாய்க் குட்டிய தூக்கி வெச்சுக்கிட்டு பாவாடை தாவனியில முதுகக் காட்டிக்கிடுருந்தா . நானும் எப்படியாவது மூஞ்சியப் பாத்துடரனும்னு காம்பௌண்ட் மேல இருந்து கீழ விழுந்தா கல கலன்னு கண்ணாடி வளையல் ஒடஞ்ச மாதிரி ஒரு சத்தம் . அவ தான் நாய்க்குட்டிய விட்டுட்டு என்னைப் பாத்திட்டுருந்தா. சுசீலாவும் சித்ராவும் அவ குரல்ல என்னாச்சுன்னு கேட்டாங்க . ஹிஹிஹின்ன்னு கேனத் தனமா ஒரு சிரிப்ப விட்டுட்டு தல தெறிக்க ஓடியாந்துட்டேன். வீட்டுக்கு வந்தா, ரேஷன் கடையில ரெண்டு கிலோ சக்கரை அதிகமாக் கெடச்ச மாதிரி ஒரு சந்தோஷம்.
அய்யய்யோ நமக்கும் காதல் வந்துடுச்சுடான்னு ஒரே இளையராஜா பாட்டா போட்டுக்கிட்டு கிரிக்கெட்லாம் தேச துரோகம்னு சொல்லி வீடே கதின்னு கெடந்தேன்.அவங்கப்பாம்மா வருங்காலத்த நெனச்சு தான் அவளுக்கு மகாலட்சுமின்னு பேரு வச்சிருக்காங்க. எங்கம்மா ஓசியில காப்பி தூள் வாங்கணும்னா கூட நாந்தான் போவேன்னு அடம் பிடிச்சு பக்கத்து வீட்டுக்குப் போய்டுவேன். ஆனா அவளப் பாத்தா மட்டும் சரக்கடிச்சிட்டு டைட்டா கெடக்கும்போது தண்ணியில்லாமத் தவிக்குற மாதிரி ஆயிடும்.
ஒருநாள் எங்க குல தெய்வத்தெல்லாம் மனசுல நெனச்சுக்கிட்டு நேரா போய் அவகிட்ட பேசுனேன். மகா எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் ... எனக்கும்தான்னு சொன்னா... அப்படியே பேக் கிரௌன்ட்ல இளையராஜா.நீன்னா எனக்கு உயிருன்னேன் . எனக்கும்தான்னு சொன்னா.. மூணு வருஷம் போகட்டும் எல்லா பேசிக்கலாம்னு சொன்னா.
ரெண்டு பேரும் லீவு முடிஞ்சி காலேஜ் போனப்புறம். போன்லயே காதல் வளத்தோம் . பொறந்த நாளைக்கு, லவ்வர்ஸ் டேய்க்குன்னு மாறி மாறி கிரீட்டிங் கார்டும் , கிப்டும் பறந்துச்சு.ஒவ்வொரு வருஷம் செமஸ்டர் லீவும் எங்க காதலோட பொற்காலங்கள். மூணாவது வருஷம் வரும்போது ஏனோ அவங்கவங்க வேலையில பிஸி ஆயிட்டோம்.
அப்புறம் எப்ப போன் பண்ணாலும் லைன் என்கேஜ் டாவே இருக்கும். சின்ன சின்ன விஷயத்துக்கும் சண்ட போடுவா. என்ன தவிர்க்கறதே வேலையாப் பாத்தா..
செமஸ்டர் லீவு வந்துச்சு வந்தா. வா இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்னேன். நீ என்ன லூசா ..? இது சரியா வராது எங்கம்மா இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டங்கன்னா...அப்ப இவ்வளவு நாளா பேசுனது பழகுனதெல்லாம்... அது ஏதோ அறியாத வயசுல வந்த பப்பி லவ் .. அதையெல்லாம் பெருசா எடுத்துக்காத . நாம எப்பவுமே ப்ரன்ட்ஸா இருப்போம்னா. அடிப்பாவி அன்னைக்கு நாய்க் குட்டிக்கு பதிலா என்னைப் பாத்தத நெஜமாக்கிட்டியே...
ஒரே சோகப் பாட்டாக் கேட்டுகிட்டு சரக்கடிச்சி அழுது எப்புடியோ கொஞ்ச நாள் போய்டுச்சு. ரிசல்ட்டோட சேத்து பெங்களூர் வேலைக்கு பொட்டியக் கட்டிட்டு கெளம்பிட்டேன் . அங்கதான் சந்தியாவைப் பாத்தேன். டாப்ஸ் ஜீன்ஸ், கையில சிப்பி ப்ரேஸ்லெட் கழுத்து வரைக்கும் முடி எல்லாரையும் கலாசுக்கிட்டு. ஹைன்னு வந்து நின்னா...
அன்னைக்கு முடிவு பண்ணேன் இந்தப் பொண்ண கல்யாணம் பண்ணா அம்பது வருஷத்துக்கு மேல ஒரு நாள் கூட வாழ்ரதில்லன்னு . ...
பின்ன நாங்கெல்லாம் தெருத் தெருவா செருப்படி வாங்குனாலும் உச்சி வெய்யில்ல ஒரு டீயக் குடிச்சிட்டு ஒதறி விட்டுட்டு போற கைப்புள்ளைங்கய்யா...
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஏம்வே,நாமும் தான உம்ம கூட பெங்களூர்ல வேல செஞ்சோம்..யாரு வே அது சந்தியா ?
யோவ் கதைக்காக ஏதாவது சொன்னா
குடும்பத்துல கொழப்பத்த உண்டு பன்னிருவிங்க போலிருக்கே .............
ஏம்வே ,எத எத கதைக்கு சொல்லனும்னு இல்லையா?பெரிய கிருத்துவம் புடிச்சவர் போல இருக்கே..இப்பிடித்தான் பல பேர் சொல்ற கதைகளை உண்மைன்னே நம்பி, நாம எதாவது செய்யப் போய், "ரெம்ப நல்லவன்னு"பேர் வாங்குறம் போல இருக்கு ..
Post a Comment