என்ன எழுத இன்னைக்கு............
நானும் சுத்தத் தமிழல பதிவு எழுதி பாத்தேன். ஒரு சீண்டலும் இல்ல .. அப்புறம் தான் கேபிள் சங்கர், வெளியூர்காரன்,பட்டாப்பட்டி பதிவெல்லாம் படிச்சி கொஞ்சம் தமிழ் உணர்ச்சி வந்துச்சு.
எதப்பத்தி பதிவு எழுதலாம்னு ரொம்ப யோசிச்சி கடைசியில என்னைப் பத்தியே எழுதுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். நான்னா நான் இல்ல ஒவ்வொருதர்க்கருள்ளையும் இருக்குற நான்..
காசு காசுன்னு அலையிற கூட்டமாயிட்டோம் . ஒருநாளைக்கு கையில 500 ரூவா 1000 ரூவா நோட்டையும் வச்சுக்கிட்டு பைத்தியமா அலையப் போறோம்.
தெருமுனையில இருக்குற ஆடோவுல ஆரம்பிச்சி மெகா மால்ங்க வரைக்கும் எல்லாம் காசு தான்....
அக்கா அம்மா தங்கச்சி உறவுல இருக்குற பொம்பளைங்கள்லாம் நம்ம வீட்டுக்குள்ள மட்டும் தான் . வெளியில வந்துட்டா எல்லா பொம்பளைங்களும் ஒருதடவயாது கனவுல பெட்ரூம் வரைக்கும் வந்துட்டுப் போயிடறாங்க..
ஜிகுடிங்களும் அப்புடி தான் இருக்கு , நல்லா கடலை போட்டு, போன்ல அவிங்க காசுல ஒரு 548 மிஸ்டு காலும் , நம்ம காசுல ஒரு 5000 காலும் அவிங்க போனுக்கு வரலன்னா தூக்கமே வர மாட்டிங்குது..
அரசாங்க பள்ளிகூடத்துல சத்துணவு சாப்டுட்டு தூக்க கலக்கத்துல மத்தியான கணக்கு பாடம் படிச்சதெல்லாம் இப்போ இல்ல. கூலி வேலைக்கு போனாலும் கலர் கலரா யூனிபார்ம் போட்டு சூ மாட்டி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி டாடி மம்மினு காதுல கேட்டாதான் , நம்ம அப்பன் ஆத்தா பண்ண புண்ணியமெல்லாம் உண்மைன்னு
தோணுது.e
பத்து ஏக்கர் நெலம் வெச்சு வெவசாயம் பண்ண எங்கப்பாரு பம்பாய் மார்க்கெட் 50 பாயிண்ட் டௌநாமுண்ணு ஷேர் மார்க்கெட் பத்தி பேசுறாரு....
முப்பது வருஷமா இந்த சினிமா காரங்களும் இதுவரைக்கும் யாரும் சொல்லாத கதைன்னு ஒரே காதல் கதைய படமேடுத்டுற்றுக்காங்க . அத நம்ம வீட்டு சின்னப் புள்ளைங்கல்லாம் டாடி மம்மி வீட்டில் இல்லன்னு மேடை ஏறி சூப்பர் சிங்கரா மாறுறதுக்கு பாடுதுங்க. அத நம்மளும் சோத்த தின்னுகிட்டே மொளகாயக் கடிச்சமா கதிரிக்காவ கடிச்சமான்னு தெரியாம குடும்பத்தோட ரசிக்குறோம்.
இதெல்லாம் பத்தாதுன்னு சத்தியானந்தா மாதிரி சாமிங்கேல்லாம் சன் டிவியில இலவசமா சீன் படம் காட்டுறாங்க..
எல்லாமே இப்புடி மாறி போச்சேன்னு என் பொண்டாட்டிகிட்ட பொலம்பிற்றுந்தேன். பேசாம தூங்குங்க நாளைக்கு பாத்துக்கலாம்னு சொன்னா.
காலையில எழுந்தவுடனே வாங்க போலாம்னு என்ன ஒரு மனநல மருத்துவர்கிட்ட கூட்டிட்டு போய்ட்டா. அவளை சங்கடப் படுத்தவேனாமுன்னு நானும் போனேன். மாத்திர மருந்தோட ஒரு 5000 ரூவா செலவு வெச்ச டாக்டர் என்கிட்டே சொன்னார். எல்லா பிரச்சனையும் மனசு விட்டு சொல்லுங்க சரியாப் போயிடும்னு சொன்னார்.
அட பாவிங்களா இதத் தானடா நானும் செஞ்சேன் ..................................
n
5 comments:
nalla padhivu vaazhthukkal
அட பாவிங்களா இதத் தானடா நானும் செஞ்சேன் .................................. super
உண்மையா சொன்ன இதுதான்....
நம்மில் பலர் மாறிவரும் கலாச்சாரத்தை
கடந்த 10 வருடமாக சொந்த மண்ணில் அனுபவி காதலால்
வந்த விளையுவ்...நீங்க மனநல மருத்தவரை பார்க்க சென்ற காரணம்....உங்கள்(எங்களின்) அழகான மனதிரை இந்த பதிவ்
nice one
அட பாவிங்களா இதத் தானடா நானும் செஞ்சேன் .... can't stop laughing..!!!
Post a Comment