Tuesday, April 28, 2009

அய்யா தலைவரே...

அய்யா தலைவரே..,
இனமானக் கலைஞர். நீங்கள் கலைத்தாயின் தவப்புதல்வர். அதனால்தான் நடிப்பு உங்களுக்கு அற்புதமாய் வருகின்றது . உங்கள் உண்ணாவிரத நாடகம் உச்சகட்டக் காட்சி. எதற்கு உங்களுக்கு இந்த வேலை. உங்களுக்கு செய்ய வேண்டிய வேலையே நிறைய இருக்கிறது. அழுகின்ற எம் ஈழத்து தாய்மார்களுக்கு கவிதை எழுத வேண்டி இருக்கும். துப்பாக்கி குண்டு கிழித்த வாயோடு பால் குடிக்கும் பிஞ்சுகளுக்காய் தந்தி அடிக்க வேண்டி இருக்கும். இல்லை இன்னும் இராணுவத் தளவாடங்களை எப்படி கொடுக்கலாம் என்று யோசிக்கும் சோனியா பிசாசுக்கு யோசனை சொல்ல வண்டி இருக்கும். நீங்கள் நடத்திநீர்களே ஒரு நாடகம் , நான் கொஞ்சம் பயந்து தான் பொய் விட்டேன், எங்கே உங்களுக்கு சோனியா வந்து பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடிக்கச் சொல்லுவாரோ என்று. நல்லவேளை அப்படி எதுவும் அசம்பாவிதம் நடக்கவில்லை ... என்ன கொடுமை அய்யா.. நெஞ்சம் வலிக்கிறது .. உங்களுக்கு உணர்விருந்தால் தயவு செய்து சும்மா இருங்கள்..

No comments: