ரொம்ப நாளாச்சு உங்களை எல்லாம் சந்திச்சு .
காரணம் ஒன்னும் பெருசா இல்லீங்க .
கோபமும் வன்மமும் ஒரு மனுஷனுக்கு அவசியமா..இது ஒரு விடை தெரியாத கேள்விங்க ..சினிமாவுல நாயகன் வில்லன அடிச்சி சித்திரவதை பண்ணி சாகடிக்கும்போது கை தட்டி ரசிக்குறோம். உள்ளுக்குள்ள சந்தோசப்படுறோம், அதே ஒரு அப்பாவிய நாலு பேரு போட்டு அடிக்கும்போது மனசு கலங்குறோம் . அதே ரத்தமும் சதையும் தான் . ஆனா இடமும் ஆளும் தான் வேறுபடுது.. ஆக நியாயத்துக்காக படுற கோபம் நியாயமானது தான்.
சேரனா, பாண்டியனா , வீர சோழனா வாழ்ந்து களரி, மல்யுத்தம் சிலம்பம்னு வீரத்த சொல்லி வளர்ந்த தமிழினம் ஒரு அம்பது வருஷ காலத்துல ரொம்பத் தாங்க மாறிப் போச்சு. இதுக்கு காரணம் அரசியலா , கல்வியா இல்ல நம்ம வளர்ப்பு முறையான்னு தெரியல.
அட்ஜஸ்ட் பண்ணி போறத நம்ம வாழ்க்கையில ஒரு முக்கியமான விஷயமாக்கிட்டோம்.இது தான் நம்ம வீரம் கொறஞ்சு போனதுக்குக் காரணமோ. பஸ்சுல அம்பது பைசா கொடுக்காமப் போற கண்டக்டர் , ப்ரிட்ஜுல வெக்குற கூல் ட்ரின்குக்கு ஒரு ரூபா அதிகமா விக்குற கடைக்காரர், காசு குடுக்காம வேல செய்ய மறுக்குற அரசு அதிகாரி, எல் கே ஜி படிக்குற புள்ளைக்கு ஒரு லட்சம் வாங்குற பள்ளிக்கூடம், தனக்குத் தானே பில்ட் அப் குடுத்துக்குற சினிமாக் காரர்னு எல்லா எடத்துலயும் நம்ம கோவத்த அடக்கி வெச்சு நடக்குற எல்லா தப்புக்கும் நாமும் ஒரு காரணம் ஆயிட்டமோன்னு மனசு உறுத்துதுங்க.
யார் வம்புக்கும் போக மாட்டார் , ரொம்ப நல்லவர்.நல்லவனா இருக்கிறது ரொம்
ப கஷ்டமுன்னு பேசி பேசியே ஒரு சமுதாயத்தையே கெடுத்து வசிருக்கோமுங்க..
அய்யா கேள்வி கேக்காம எந்த விஷயமும் கெடைக்காதுங்க. மனசாட்சிக்கு மட்டும் பயப்பட்டுப் பாருங்க , நிமிர்ந்த உங்க தலை பூமியப் பாக்கவே பாக்காது.
உங்க புள்ளைகளுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு யாராவது சொன்னா ஓங்கி செவுள்ள அறையனும்னு சொல்லிக் கொடுங்க..
பாரதியார் சொன்னா மாதிரி "ரௌத்திரம் பழகு" ங்க . அது தாங்க உங்க வீரத்தையும் மானத்தையும் விழாம பாதுகாக்கும் ..............
2 comments:
நல்லது பழகிடுவோம்
நல்லா பழகுங்க..
Post a Comment