Saturday, June 20, 2009

விடை பெறுகிறோம்....

இன விடுதலை, தனி மனிதச் சுதந்திரம், மனிதனை மனிதனாக மதித்தல் இவை எல்லாமே முல்லிவைக்காளில் கழுகுகளும் காக்கைகளும் கொத்தித் தின்று கொண்டிருக்கும் எங்கள் தோழர்களின் பிணங்களிலும் , முள்வேளிக் கம்பிகளுக்கு நடுவே வரவே வராது என்று தெரிந்தும் எதிர் காலத்தை நோக்கிக் காத்திருக்கும் எங்கள் பிள்ளைகளின் கண்களிலும் , இனவெரிக்காரர்களாலும், இந்தியாவின் ஏகாதிபத்திய போட்டியாலும் இன்று தோற்கடிக்கப் பட்டுவிட்டன...
இனவிடுதலைக்காகவே போராடி , சக மனிதனின் துன்பங்களை உணர்ந்து , இத்துணை நாளாய் ஒரு வலிமைமிக்க போராட்டத்தை முன்னின்று நடத்திச் சென்று இன்று போர்க்களத்தில் வீரச்சாவடைந்ததாகக் கூறப்பட்டாலும் எங்கள் இதயங்களில் என்றும் வாழப்போகும் சகோதரனே.. இன்று நாம் தோற்கடிக்கப்பட்டது நம் இரத்த உறவுகளால் , நம் உறவு நாடாம் இந்திய தேசத்தின் வலிமைமிக்க அரசியல் நாடகங்களால்.
நீ கவலையுறாதே உலகிற்கு எப்போதும் நல்லது என்றுமே நிலைக்காது என்று நிரூபிக்க யாராவது மடிய வேண்டி இருக்கின்றது..
இன்று அந்த பட்டியலில் உன்னுடைய பெயர்
கண்களில் வரக் கண்ணீர் இல்லை , அழுது அழுது நா வறண்டு அப்படியே செத்துப் போனாலும் மகிழ்வுடனே ஏற்றுக் கொள்ள மனம் துடிக்கின்றது .....
இனி தமிழகத் தமிழன் இருக்கும் வரை நமக்கு இன விடுதலை என்று ஒன்று வரவே போவதில்லை .
நாங்கள் சூடு சொரணை இன்றி தொலைக்காட்சிப் பெட்டிகளில் சிருக்கிகளின் மானாட மயிலாட பாப்போம். பேருக்கு வைக்கும் தேர்தல்களில் ஒட்டு போட்டு தில்லியில் நாற்காலி பேரம் நடத்தும் எங்கள் தலைவர்களின் வெற்றியைக் கொண்டாடுவோம். எங்கள் திரை நாயகர்களின் முதல் நாள் காட்சிக்கு விசிலடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடுவோம். இல்லை அலைபேசி குறுந்தகவல்களில் காதல் வளர்க்க தீவிரமாய்ப் போராடுவோம்...
இன விடுதலையை பற்றியோ, வன்னியில் மானமிழக்கும் எங்கள் சகோதரிகளின் கற்ப்பை பற்றியோ, இல்லை முள்வேளிக் கம்பிகளுக்கு இடையில் எதிர்காலத்தை தொலைத்து விட்டு காத்திருக்கும் எங்கள் மக்களைப் பற்றியோ எங்களுக்கு அக்கறை இல்லை
இனியாவது நீ ஒரு நிம்மதியான உறக்கத்தை எடுத்துக் கொள் சகோதரா... நானும் விழிப்புணர்வு குறித்த இப்பனியிலிருந்தும் தமிழினத்தில் நானும் ஒருவன் என்ற நிலையிலிருந்தும் விலகிக் கொள்கின்றேன்...........
கண்ணீருடன் நன்றி ..

No comments: